நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள்

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள்
Pimples-in-Forehead

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவரை சந்திக்கும் போது நேரடியாக பார்க்கும் போது சட்டென நமக்கு தெரிவது அவரது முகம் தான். அதனாலேயே முகத்தினை பராமரிக்க பலரும் மெனக்கெடுகிறார்கள். இது நம்மைப் பற்றிய அபிப்ராயத்தை ஏற்படுத்திடும். முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு. ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


சருமத்துளைகள் :

பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.

பொடுகு :

தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.

தலைமுடி :

தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.

ஜீரணக்கோளாறு :

நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.

மன அழுத்தம் :

ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஷாம்பு :

ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

தவிர்க்க :

இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள். விளம்பரத்தைப் பார்த்து தலைக்கு சந்தையில் கிடைக்கும் எல்லா பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.