தினை முறுக்கு - Millet-murukku.

தினை முறுக்கு - Millet-murukku.
தீபாவளி ஸ்பெஷல்: தினை முறுக்கு - Millet-murukku.


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

சிறுதானியங்களில் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் உடலுக்கு நன்மை பயப்பதோடு உடல் எடை கூடுவதையும் தடுக்கும். இன்று தீபாவளி ஸ்பெஷல் தினை முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முறுக்கு
தேவையான பொருட்கள்

தினை - 2 கப் (வறுத்தது)

 பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - 1 தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

முறுக்கு

செய்முறை

தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.

வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.

சூப்பரான தினை முறுக்கு ரெடி.

Millets Recipes | Recipes | Fry Recipes | Snacks | ஸ்நாக்ஸ் | சிறுதானிய சமையல் | சைவம் | பிரை |