இந்த தியானம் செய்ய ஒரு நிமிடம் கூட தேவையில்லை
ஆம். இந்த தியானம் தான் உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய தியானம்.
இதனை செய்ய ஒரு நிமிடம் கூட தேவையில்லை.
வெறும் அரை நிமிடம் போதுமானது.
என்ன அந்த தியானத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா..?
இது ஓஷோ அவர்கள் சொன்ன தியானம் தான்.
இந்த தியானத்தை எதிர்பாராமல் திடீரென செய்ய வேண்டும். அதில் தான் இந்த தியானத்தின் மொத்த நுட்பமும் அடங்கியுள்ளது.
எங்காவது நடந்து போய் கொண்டிருக்கிறோம், திடீரென நின்று விட வேண்டும்.
அரை நிமிடம் போதும்!
அப்படியே உறைந்தது போல் ஆக வேண்டும். நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும்.
திடீரென நாம் செய்யும் இந்த நிகழ்வு நமது உடல் இயக்கத்தை மட்டும் நிறுத்துவதில்லை.
மனமும் உடனே நின்று விடுகிறது.
நமக்குள் உருவான அந்த சக்தி இந்த திடீர் நிறுத்தத்தால் நமது விழிப்புணர்வுக்கு செல்கிறது.
அப்போது தியானம் நிகழ்கிறது.
இந்த தியானத்தை கண்டு பிடித்தவர் ரஷ்ய ஞானி ஜார்ஜ் குருட்ஜீஃப்.
இந்த தியானத்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறை செய்ய வேண்டும். அதிக பட்சம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆக இந்த தியானத்தை செய்ய ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.