ஆராேக்கியமான காய்கறி பாொியல்
ரெசிபிக்களிலேயே பொரியல் ரெசிபியில் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கும். ஏனெனில் பொரியல் ரெசிபிக்களில் பயன்படுத்தும் காய்கறிகள் அனைத்தும் வேக வைத்து சமைப்பதால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு அப்படியே கிடைக்கும். மேலும் பொரியல் செய்வது என்பது மிகவும் எளிமையானது. பெரும்பாலும் பொரியல் ரெசிபிக்கள் ஒரே மாதிரியான செய்முறையைக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால், உடலில் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வீட்டை விட்டு வேறு ஊர்களில் வீடு எடுத்து தங்கி வாழும் பேச்சுலர்கள் கூட, அடிக்கடி பொரியலை சமைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் அவர்கள் கடைகளில் அதிகம் வாங்கி சாப்பிடுவதால், இதய நோய், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகள் உடலை எளிதில் தாக்கக்கூடும். ஆகவே காய்கறிகளை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை பொரியல் போன்று சமைத்து சாப்பிடுங்கள்.