‎வாழும்போதே‬ ‪ ‎முக்தி‬ ‪ ‎வேண்டுமா‬?

‎வாழும்போதே‬ ‪ ‎முக்தி‬ ‪ ‎வேண்டுமா‬?

‪#‎இதோ‬ ‪#‎இந்த‬ ‪#‎பதிவை‬ ‪#‎சற்று‬ ‪#‎பொறுமையாக‬ ‪#‎படியுங்கள்‬.
நமச்சிவாய
இங்கு பலர் பலரும் பலவாறு அழைத்தாலும் அனைவருக்கும் அருள்பவர் நம் ஈசன்..
பலவாறு அழைத்தாலும் நாம் ஏன்அவ்வாறு அழைக்கிறோம் என்ற மெய்யை உணர்ந்து அழைத்தால்தான் அந்த நாமம் மெய்யாக வெளிப்படும்..
பலருக்கு நமச்சிவாய என்றழைப்பதா ?நமசிவய என்றழைப்பதா? நமசிவாய என்றழைப்பதா? இல்லை ஓம் நமச்சிவாய என்றழைப்பதா?எனத் தெரியாமல் இறைவன் நாமத்தை வெறும் சொல்லாக வெளிப்படுத்தி அதனால் எந்த சிவஉணர்வையும் அருளையும் பெருவதில்லை..
இறைவன் நாமத்தை மெய்யாக அழைத்தால் இறைவன் தானே இறங்கி வருவார்.இது சத்தியம்.
மெய்யாக அழைக்கத்தெரியாதபோது அவர் அருளினையும் மெய்யையும் உணராமல் வரங்களைப்பெற்று மாயைகளில் சிக்கிக்கொள்வாய் என்பதாலே அவர் நாம் அழைத்தபோதெல்லாம் மறைவில்லாமல் வெளிப்படுவதில்லை .இருப்பினும் உனக்கேற்றவாறு உன்னை உய்விக்கும்பொரு
ட்டு கைவிடாமல் இடைவிடாது உன் பின்னிருந்து அருளுகிறார்.
நமசிவாய ஐந்தெழுத்து நமச்சிவாய என ச் சேர்த்தால் ஆறெழுத்து ஆகுமே என்ற சிந்தனையில் மெய்யாக யாரும் அழைப்பதில்லை.
இறைவன் நமக்கேற்றவாறு மறைந்துதானே இருக்கார் அப்போ அவர் நாமமும் அப்படித்தானே சற்று கூர்ந்து மெய்யைப் பார்ப்போம்.
ந=1மாத்திரை.,ம=1மாத்திரை ,ச்=1/2மாத்திரை, சி =1மாத்திரை,வா=2மாத்திரைகள்,ய=1
மாத்திரை ஆகமொத்தம் 6 1/2 மாத்திரைகள் எனப் பொதுவாக அறிவோம் .சற்று உற்றுநோக்கினால் சூட்கமம் புரியும்.
சி என்ற குறிலுக்கு முன் உள்ள மெய்யெழுத்து ச் யிற்கு மாத்திரையளவு இல்லை.உதாரணம்
க்+அ=க க்=1/2மாத்திரை +அ1மாத்திரை என 1 1/2 மாத்திரை என வராது.க =1 மாத்திரைதான்.
அதுபோல தான் எழுத்து பிறப்பதற்கான மெய்யெழுத்து அளவுகள் இல்லை.ஆக 6மாத்திரைகள்தான்.
சரி உங்கள் கேள்வி புரிகிறது.சி என்பதிலே ச்+இ=சி இருக்கிறதே மேலும் அதற்குமுன் ஏன் ச் வருகிறது என்பதுதானே.?ஆம் ச் என்ற இடத்தில் நிறுத்தி தொடங்கவேண்டும் என்பதற்காகவே சேர்க்கப்படுடுள்ளது.நிறுத்தி தொடங்கும் காரணி எழுத்தாக இருப்பதால் அது ஒரு எழுத்தாக கணக்கில் வருவதில்லை.
ஏன் நிறுத்தப்பட்டது என பார்ப்போம்...
ந என்பது உலகத்தை குறிக்கும், ம என்பது மலங்களைக் குறிக்கும், ச் என்பது பறவெளி(வெற்றிடம்) குறிக்கும்,சி என்பது சிவம்(தெய்வம்)என குறிக்கும் , வா என்பது திருவருள் (வழிகாட்டியை)குறிக்கும், ய என்பது ஆன்மாவைக் குறிக்கும்.
குறிக்கும் அர்த்தங்களைப் பார்த்தோமேயானால் இந்த உலக மலங்கள் யாவும் நம்மிடமிருந்து மூன்றுவித மாயைகளாக வெளிப்படும்.
ஒலியாக ஓம் என்ற பிரணவத்தில் தொடங்கி வெளிப்படும்,
ஔியாக சோதி யில் தொடங்கி வெளிப்படும்,
உணர்வாக காமத்திலிருந்து வெளிப்படும்,
இப்படி வெளிப்பட்ட மாயைகளின் உச்சக்கட்டம் அதன் எல்லை பறவெளி வெற்றிடம் அங்கு எதுவுமில்லை .இதுதான் முக்கியமான இடம் இந்த வெற்றிடத்தில் நாமே கடவுளாகத் தெரிவோம்.அட்டமா சித்திகள் இரசவாத வித்தைகள் இங்குதான் புலப்படும்.பலர் இங்குதான் மாட்டி மாயைகளின் எல்லைகளை முழுவதுமாக உணராமல் வேறு ஏதோ உணர்வில் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.இந்த வெற்றிடத்தில் நின்று அந்த வெற்றிடத்தை உணர்ந்து இந்த வெற்றிடத்தை உருவாக்கிய சக்தி ஒன்று இருக்க வேண்டும் அது எது என்றபோது சிவம் அதாவது தெய்வம் என்ற சித்தம் உண்டாகி பின் அதன் திருவருள் வழிகாட்டியபடி உன் ஆன்மாவை தன்திருவடிசேர்த்து முக்தியருகிறது.
இறைவன் திருநாமத்தைச் சொன்னால் முக்தி நிச்சயம் என்பதன் பொருள் இதுதான்.
நமச்சிவாய என அழைக்கும்போது இந்த உலகமாயைகளின் எல்லையை கடந்து வெற்றிடத்தை உணர்ந்து இதற்குமேல் என்னால் செய்வதுது ஏதுமில்லை இ்ந்த வெற்றிடத்தையும் செய்தது யார் எனும்போது சிவம் என்ற சிந்தம் உண்டாகி அவர் திருவருள் வழிகாட்டலின்படி உனது ஆன்மா அவர்திருவடிசேர்த்து முக்தியளிக்கும்.
ஓம் என்பது பிரணவம் இந்த பிரணவத்தை தொடக்கிய ஓவாத சத்தத்தின் ஒலியே இறைவன் .
இதைத்தான் ஓவாத சத்தத்தின் ஒலியேப் போற்றி எனப் போற்றுவார்கள்.
நமச்சிவாய என்னும்போது இறைவனை முன்னிலைப்படுத்துவோம்.
ஓம் நமச்சிவாய என்னும்போது மாயையை முன்னிலைப்படுத்தி இறைவன் திருநாமத்தை சொல்வதால் இறைவனை அறிவதோடு மிண்டும் மற்றொரு பிறவி எடுப்போம்.முக்தி இங்கு சாத்தியமில்லை.
அதனால்தான் இறைவன் திருநாமமாக நமச்சிவாய வாழ்க என நால்வர் முதலான அடியார்கள் போற்றி அழைத்தனர்.
அறுபத்துமூவரும் வாழும்போதே முக்தியடைந்த சூட்கமம் இதுதான்.
நமச்சிவாய வாழ்க..வாழ்தலே வழிபாடு
நற்றுணையாவது நமச்சிவாயவே
சிவபெருமானின் திருவருளை பெறுவதற்கு
உறுதுணையாக இருப்பவை திருநீறு,
ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய
சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்
சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும்
பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது
உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில்
கலந்துnவருவதால் நம்முள் இருந்தே நமக்குப்
பயன் தருவதாக இருக்கும்.
மந்திரங்கள் பல
இருந்தாலும் அவற்றில் தலையாயது
பஞ்சாக்கர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில்
நடுநாயகமாக நிலை பெற்றிருப்பது பஞ்சாக்கர
மந்திரமே. ரிக், யஜுர், சாம என்ற மூன்றில்
நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு
காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய
நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக
இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக
இருப்பது ருத்திர ஜெபம்.
ருத்திரத்தின் நடுவில்
வரும் மந்திரம் நம சோமாயச 'நமசிவாய'
என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக
ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும்,
பலமுறை உச்சரிக்கும்போது 'சிவாய நம'
என்றும் ஒலிக்கும்.
சிவபெருமானை வழிபடும் போது ஆகம
விதிப்படி அபிஷேக ஆராதனைகள் செய்து
இறைவனின் பெருமைகளை கூறி வாழ்த்தினால்
கூட போற்றி வணங்குதலுக்கு ஈடாகாது
என்பதை விளக்கும் நோக்கத்தில் தான் பன்னிரு
திருமறை நூல்களே உண்டாகின. அதிலும்
நால்வர் பாடிய தேவார திருப் பதிகங்கள்
அனைத்தும்சிவபெருமானே அவர்கள் வாயிலாக
கூறிய கூற்றுக்களாகவே கூறப்படு கிறது.
தோத்திரங்கள் எல்லாம் சிவனாரின்
திருவாக்குகளே என்று திருஞான சம்பந்தர்
மற்றும் திருமூலரும் கூறியுள்ளனர்.
ஒரு பாடலில் 'வாய் தோத்திரம் சொல்லுமோ'
என்ற கூற்றின் மூலம் அறியலாம். மேலும்
நாவுக்கரசர் சுவாமிகளும் 'சலம்போடு பூ
மறந்தறியேன்' தமிழோடு இசைபாட
மறந்தறியேன்' என்ற வாக்கின்படி சிவ
தோத்திரப்பாடல் எவ்வாறு அவசியம் என்பதை
உணர்த்துகின்றன. இந்த தோத்திரப்பாடல்கள்
நீண்ட பாடல்களாக இருப்ப தால் தான் இதனை
சுருக்கி மூல மந்திரங்களாக ஞானி களும்
சித்தர்களும் அமைத்துள்ளனர். அவ்வாறு
அமைக்கப்பட்டது தான் திரு ஐந்தெழுத்து
மந்திரமான ” நமசிவாய” மெனும் மந்திரம்
இதன் பெருமை யினை நம்மால் சொல்ல
இயலாது இதனை ஞானிகளும் சித்தர்
பெருமக்களும் இதன் வலிமை குறித்து பாடிய
பாட்டுக்களை இங்கே காணலாம்.
‪#‎திருஞானசம்பந்தர்‬
நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி இச்சையும்
நமசிவாயவே நாநவின்று ஏத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
‪#‎திருநாவுக்கரசர்‬
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
பூவினுக்கு அருங்கலம்
பொங்குதாமரை
ஆவினுக்கு அருங்கலம்
அரன் அஞ்சாடுதல்
கோவிலுக்கு அருங்கலம்
கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
(இன்னும் பத்துப்பாடல்களை நமச்சிவாயப்
பதிகத்தில் பார்க்கலாம்.)
‪#‎சுந்தரர்‬ தேவாரம்
நற்றவா உன்னை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயமே
‪#‎மாணிக்கவாசகர்‬
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என்
நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட
குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று
அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
‪#‎பெரியாழ்வார்‬
பல்லாண்டு, பல்லாண்டு,...
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு! உனக்குக்
காப்பு இல்லை! உனது திருவடிகளுக்குத்
திருக்காப்பு! என்கிறார்.
‪#‎இராமலிங்க‬ சுவாமிகள்
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவர்த்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
சிவாய நம என்று சித்திருப்போருக்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்,
‪#‎திருமூலர்‬
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
‪#‎சிவவாக்கியர்‬ :
சிவாய வென்ற அட்சரஞ்
சிவனிருக்கும் அட்சரம்
உபாயமென்று நம்புவதற்கு
உண்மையான அட்சரம்
கபாட மற்ற வாசலைக்
கடந்துபோன வாயுவை
உபாய மிட்டழைக்குமே
சிவாயவஞ் செழுத்துமே.
ஆகவே தினமும் 1008 முறையாவது
“நமசிவாய ”மெனும் திருவைந்தெழுத்து மந்திரத்தை நாம் மனதார கூறி வந்தாலே
அல்லல் அறுத்து ஆனந்தம் உண்டாகும்
என்பதை மனதில் வைத்து நாதத்தின்
நாயகனை நாதத்தால் தான் கட்ட இயலும்
என்பதை கருத்தில் கொண்டு "நமசிவாய"
என்னும் மூலமந்திரத்தை நாளும் தவறாது
ஓதுவோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவருக்கு இறைவா போற்றி!
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்