‪‎வாஸ்து‬ - வீட்டு மனை

‪‎வாஸ்து‬ - வீட்டு மனை




1, வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.

2, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

3, மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும்.

4, ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

5, வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

6, வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.

7, மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில்
கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

8, வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கினறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

9, வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில்
அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

10,வீடுகட்ட கடைக்கால் தோண்டும்போது முதலில் ஈசானியத்தில்
ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும்.

11, வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்
பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

12, தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.

13, வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு,

வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

14, பஞ்சபூதாஅற்றல் கிடைக்கு ஈசானிய மூலை காலியாக இருக்க
வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.

15, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள்
அமையவேண்டும்.

16, வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

17, கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும்.

18, தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத்
தொட்டி அமைய வேண்டும்,

19, கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும்.

20, செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு
சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

21, அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

22, வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க
கூடாது.

23, மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய
வேண்டும்.

24, வீட்டிற்கு தெற்க்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

25, வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

26, ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்பது
நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது.

27, ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு,தென்கிழக்கு
பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்க கூடாது.

28, .பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின்
தென்கிழக்கில் அமைக்கலாம்.

29, ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

30, அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.

31, தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.

32, உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது.

33, வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.

34, ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.

35, வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும்
மரங்கள் வள்ர்க்ககூடாது.

36, வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை
வெட்டக் கூடாது.

37, ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது.

38, வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.

39, வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும்
செப்டிக்டேங்க் அமைக்க கூடாது.

40, வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க
கூடாது.

41, வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்
கூடாது.

42, வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ
தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும்
சோதனைகளுமே வரும்.

43, வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

44, வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை
வாங்கலாம்.

45, வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை
இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.

46, ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.

47, ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு
அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு
அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.

48, ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை
விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை
விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.

49, ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து
அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும்
கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

50, தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது.

51, மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது.

52, வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு
அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி
மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.

53, ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும்,

4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.

54, வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும்
முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின்
ஈசானியத்தில் வாஸ்து பூஜை [ பூமி பூஜை ]செய்தல் மிக நல்லது.

55, வீட்டை செப்பனிடம் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர
நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும்
கவனமாகவும் செய்து முடிக்க வேண்டும்.

56, வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும்
பரவாயில்லை பாதியில் நிறுத்தவேக் கூடாது.

57, முறையான கணக்குகளுடன் செய்யபட்ட பிரமிடுகளை வீட்டில்
உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்
சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை
வாழவும் வைக்கின்றது.

58, வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன் மறைவு நேரத்தில்
செய்யப்படும் அக்னி ஹோத்திரம் சுற்றுப்புரச் சூழலை பாதுகாத்து
ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே
செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.

59, வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்
தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6 வது பாகங்களில்
தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.

60 வீட்டின் தென் மேற்கு சேமிப்பு அறை , படுக்கை அறை, பீரோ, பெட்டி
வைக்கவும்,

61, வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.

62, வீட்டின் தென்கிழக்கில்தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும்
படியாக இருத்தல் வேண்டும்.

63, வீட்டின் கிழக்கில்தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.

64, வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும்போது கிழக்கு திசை
பார்த்து சாப்பிட வேண்டும்.

65, வீட்டின் வட மேற்கில்தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.

66, வீட்டின் வடக்கில்தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல்வேண்டும்.

67, வீட்டின் வடகிழக்கு திசையில்தான் இறைவழிபாடு/ தியானம் செய்தல்
உயர்வானது.

68, வீட்டின் ந்டுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.

69, வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிகமிக உயர்வானது.

70, எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.

71, தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும்
விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.

72, தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளி படிமிடமான
முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடல் நல்லது.

73, வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும்
இருப்பது மிக மிக நல்லது.