சம்பள உயர்வுக்கு 10 வழிகள்!
இந்த நிதி ஆண்டில் எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருப்போம். சம்பள உயர்வை எந்த வகையில் உயர்த்துவது என்று யோசிப்பவர்கள் பின்வரும் பத்து விஷயங்களைப் பின்பற்றலாமே...
1 ஆவணப்படுத்துங்கள்: அலுவலகம் தொடர்பான உங்கள் வேலைகள் அனைத்தையும் ஆவணங்களாக வைத்திருங்கள்: நீங்கள் என்னென்ன வேலைகளைப் பார்த்தீர்கள், என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள் என்பதைக் கையில் கோப்புகளாகவும், ஆவணங்களாகவும் வைத்திருந்தால், சம்பள உயர்வு பற்றி ரெவியூ செய்யப்படும் போது அவற்றைக் கொடுத்து அசத்தலாம். சம்பள உயர்வு கிடைக்க இது பேருதவியாக இருக்கும். இந்த ஆவணங்களை எல்லாம் பார்த்தபின் உங்கள் உயர் அதிகாரிகள், நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள். இந்தப் பதவியிலேயே இவ்வளவு பக்காவாக இருக்கும் உங்களுக்கு ஏன் பதவி உயர்வு தரக்கூடாது என்று நினைப்பார்கள்.
2 சுயமதிப்பீடு: தன்னம்பிக்கையுடன் உங்களைப் பற்றி நீங்களே சுயமதிப்பீடு செய்யுங்கள். அது நீங்கள் உங்கள் நிறுவனத்தில், உங்களுடைய குழுவில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், உங்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு தரலாம் என்பதையும் உணர வைக்கும். இதன் மூலம், உங்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக நீங்கள் யாரையும் குற்றம்சாட்ட வேண்டிய அவசியம் இருக்காது.
3 உங்கள் தலைமையுடன் இணக்கம்: ஒருவேளை, நீங்கள் உங்களுடைய தலைமையுடன் முரண்பட்டு இருந்தால், உங்களது விடாமுயற்சி யும், உங்களுடைய கடின உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர் போலாகிவிடும். அவர்தான் இறுதியில் சம்பள உயர்வைத் தீர்மானிப்பவராக இருப்பார்.
4 அணியில் முக்கியமான ஒருவராக இருங்கள்: உங்கள் அணியில் உள்ளவர்களுடன் இணைந்தும், அவர்களுக்கு உதவி செய்வதையும், வழிகாட்டுவதையும் முக்கிய பழக்கமாக வைத்திருங்கள். இது முக்கியமான தருணத்தில் சராசரி சம்பளத்தைவிட அதிகமான சம்பளத்தைப் பெற்றுத் தரும்.
5 உங்களுடைய எதிர்கால இலக்கை நிர்ணயுங்கள்: உங்களுடைய அடுத்த வருட இலக்கை, உங்களுடைய தலைமை அதிகாரியுடன் உட்கார்ந்து விவாதியுங்கள். இது உங்களுக்கு நிறுவனத்தின் மீதுள்ள விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் உணர வைக்கும். இது உங்களுக்கு நல்ல மதிப்பையும், சம்பள உயர்வையும் பெற்றுத் தரும்.
6 முக்கிய நடவடிக்கையில் பங்கு பேறுங்கள்: உங்கள் வேலை களில் நீங்கள் வளைந்துகொடுக்கும் போது உங்கள் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்துவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் பல்வேறு பணிகளைச் செய்பவராகவும், நம்பகமானவராகவும் இருந்தால், உங்களுடைய மதிப்பு உயர்ந்து, தானாகவே சம்பளம் உயரும்.
7 உங்கள் வேலையைப் பற்றி, தலைமைக்கு தொடர்ந்து தெரிவியுங்கள்: நீங்கள் சரியான திசையில் பயணித்து வருவதையும், ஏதேனும் தடைகள் இருந்தால், அதில் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்கும் தொழில் முறையில் பணியை மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. இந்த மதிப்பீட்டுப் பயிற்சியின் மூலம் உங்கள் தலைமைக்கு நீங்கள் செய்யும் பணிகளைத் தெரிவிப்பதோடு, அவர்களுடைய மனதில் உங்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்கிற எண்ணத்தையும் உருவாக்குவீர்கள்.
8 திறமையை மேம்படுத்துங்கள்: சமீபத்திய முன்னேற்றங் களுக்குத் தகுந்தாற்போல் தொடர்ந்து உங்கள் திறமையை யும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களைவிட நீங்கள் முன்நிற்கவும், நிறுவனம் உங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் இருக்கும்.
9 தீர்வு காண்பவராக இருங்கள்: நிறுவனத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வினைக் கண்டறிந்து சொல்பவராக இருங்கள். அப்போது நிறுவனத்தில் உங்கள் மீது மதிப்புக் கூடும். மேலும், உங்களை நிறுவனத்தின் தலைமை, நட்புடன் வைத்திருக்கும். ஊதிய உயர்வும் உங்களுக்குச் சாதகமாகும்.
10 வேலையில் அர்ப்பணிப்பு: வேலையில் பொறுப்புமிக்கவராக வும், சரியான நேரத்தில் அலுவல கத்துக்கு வருபவராகவும் இருங்கள். காலக்கெடுவுக்கு முன்பே அனைத்துப் பணிகளையும் முடித்துத் தருபவராக இருங்கள். நேரம் தவறாமை உங்களைக் கடமை உணர்வு கொண்டவராகவும், வேலையில் பொறுப்பு மிக்கவராகவும் காண்பிக்கும்.
இந்த 10 விஷயங்களையும் பின்பற்றினால், சம்பள உயர்வு உங்களைத் தேடி தானே வரும்.