சிவப்பு அரிசி - Red Rice Benefits
செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி
https://rupeedeskshares.blogspot.com
சிவப்பு அரிசியில் அதிகம் காணப்படும் நார்ச்சத்தானது, உண்ணும் உணவை சுலபமாக செரிமானப்படுத்த உதவுகிறது. இதனால் இவை செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
சிவப்பு அரிசி
மேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கொஞ்சம் குறைந்துவிட்டது என்றே கூறலாம். நம் நாட்டில் ஏராளமான அரிசி வகை இருந்தன. அதிலும் பெரும்பாலான வகை தமிழ்நாட்டில் மட்டுமே, கிடைத்ததாக வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 200 வகையான அரிசி சேமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகள் மிகுந்திருப்பவை.
இத்தனை அருமை மிக்க அரிசி இருந்தாலும், பொதுவாக நம் வீடுகளில் பயன்படுத்துவது வெள்ளை ரக பொன்னி அரிசிதான். இதன் உணவு எளிதாக செரிமானம் அடைந்துவிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் அடைய தாமதமடைந்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை சீராக பராமரித்து ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. மேலும், அரிசியை பாலிஷ் செய்யும் போது அதில் உள்ள அனைத்து விதமான சத்துக்களும் நீக்கப்பட்டு விடுவதால், மீதமுள்ள மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
இப்படி வெள்ளை அரிசிக்கும் பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணத்தில் நிறைய மாறுபாடுகள் இருக்கின்றன. வெள்ளை அரிசியின் விலை குறைவு, அதே நேரத்தில் பாரம்பரிய அரிசியின் விலை அதிகம் என்ற பரவலான எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. ஆனால், பாருங்கள் அரிசியை மலிவாக வாங்கிவிட்டு மருத்துவத்திற்காக அதிகம் செலவழிக்கிறோம். முழு தானியங்களை நாளொன்றுக்கு மூன்று முறை உட்கொள்ளலாம்.
இப்போது பழுப்பு அரிசி என்று கடைகளில் விற்கப்படும் கைக்குத்தல் அரிசியானது குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாகத் தீட்டப்படாததால் மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். இந்த அரிசிச்சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் தாதுச்சத்தான பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளன.
மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. புற்றுநோயைத் தடுக்கலாம். கொழுப்பை குறைக்க உதவும். சிவப்பு அரிசி இதை புட்டு அரிசி என்று கடைகளில் விற்கிறார்கள். சிவப்பு அரிசியில் அதிகம் காணப்படும் நார்ச்சத்தானது, உண்ணும் உணவை சுலபமாக செரிமானப்படுத்த உதவுகிறது. இதனால் இவை செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
பால், பருப்பு, முட்டை, இறைச்சி இவற்றிற்கு அடுத்தபடியாக சிவப்பு அரிசியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. தினமும் சிவப்பு அரிசியால் செய்த பதார்த்தங்களை காலை உணவாக எடுத்துக் கொண்டால் நாள்முழுவதும் நல்ல உடல் நன்மையைத் தரும். இவை குழந்தைகள் நல்ல உடல் மற்றும் மனவளர்ச்சி பெற உதவுகிறது. சிவப்பு அரிசியால் செய்யப்படும் சிவப்பரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் உடல் ஆற்றல் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753