பார்லி - பாலக் சூப்

பார்லி - பாலக் சூப்
barely-palak-soup
சத்து நிறைந்த பார்லி - பாலக் சூப்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பார்லி, பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பார்லி - அரை கப்,
பாலக்கீரை (நறுக்கியது) - ஒரு கப்,
பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 4,
கிராம்பு - 2,
பட்டை - சிறு துண்டு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பார்லியை வேகவைத்து வடித்து ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளவும்.

வேக வைத்த பார்லியில் ஒரு ஸ்பூன் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

நறுக்கிய கீரையை கொதிக்கும் நீரில் போட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் நீரை வடித்து, கீரையை அரைத்து கொள்ளவும்.

பூண்டு, சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றை ஒன்றிரண்டாக சிதைக்கவும் (அல்லது மிகப் பொடியாக நறுக்கலாம்).

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு சூடானதும் சின்ன வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அரைத்த கீரை விழுது, கொத்தமல்லித்தழை, பார்லி தண்ணீர் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்), உப்பு, மிளகுத்தூள், அரைத்த பார்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, பரிமாறவும்.

சூப்பரான சத்தான பார்லி - பாலக் சூப் ரெடி.