பால் குடிக்கும் போது தூங்கிய குழந்தையை எழுப்புவது எப்படி?

பால் குடிக்கும் போது தூங்கிய குழந்தையை எழுப்புவது எப்படி?
How-to-raise-a-sleeping-child-when-drinking-milk.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும்.

அன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன் சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறக்கத்தில் மூழ்கி கனவுகளில் மிதக்கத் தொடங்கி விடும்.

இவ்வாறு அடிக்கடி உறங்குவதால், குழந்தையால் சரியாக பால் அருந்த முடியாது; இதன் விளைவு குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும். குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது ஏன் உறங்குகின்றன, அதற்கு என்ன காரணம் என்று தாய்மார்கள் அறிந்து, அதை நிவர்த்தி செய்ய முயற்சிப்பது அவசியம்.


 குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும். குழந்தையை எழுப்ப கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

குழந்தையின் முதுகை மெதுவாக தட்டிக்கொடுத்து எழுப்ப முயலலாம்.

குழந்தையின் ஆடைகளை நீக்கி விட்டு, வேற்று தேகத்துடன் இருக்க செய்தால், நீங்கள் ஆடைகளை களையும் பொழுதே குழந்தை முழித்து விடும்.

குழந்தையின் உடல் உறுப்புகளில் மெதுவாக குசு சத்தம் வெளிப்படும் வகையில் ஊதி, குழந்தையை எழுப்பலாம்.

குழந்தையின் கால் அல்லது கைகளில் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் மிருதுவாக கிச்சு கிச்சு காட்டி எழுப்பலாம்.

குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடுவது போல், அதை சற்று தொந்தரவு செய்து, குழந்தையின் தூக்கத்தை துரத்தலாம்.

குழந்தை பால் குடிக்கும் போது தூங்கி விட்டால், அதனை ஒரு மார்பகத்திலிருந்து மற்ற மார்பகத்திற்கு மாற்றி, அந்த முலைக்காம்பை பற்றிக்கொள்ள செய்ய முயற்சிக்கலாம்; இந்த முயற்சியின் பொழுது கண்டிப்பாக குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும்.