குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்காரணங்கள்

குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்காரணங்கள்
children-Eyes-Problem-Reasons.


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.



இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.