தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்?

தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்?
Breastfeeding.

     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்?
பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம். பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.

அரிதான பிரச்னை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது. மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம். இது போன்ற பிரச்னைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.


அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள். முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.

பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்னை இருக்கும். கர்ப்பக்காலத்தில் அதிக ஸ்ட்ரஸ் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும். இரும்புச்சத்து அளவு தாயுக்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்னை இருக்கும். சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை இருக்கும்.

தாய்ப்பால் சுரப்பு குறைந்திருக்கிறது என எப்படி கண்டுபிடிப்பது?

5-6 முறை குழந்தை மலம் கழிக்க வேண்டும். இதுதான் தாய்ப்பால் போதிய அளவு கிடைத்த குழந்தையின் அடையாளம். 3-4 முறை மட்டுமே குழந்தை மலம் கழித்தால் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை. குறைவான, மிக மிக நீர்த்த மலம் இருப்பது. 8-10 முறை சிறுநீர் கழிக்கவில்லை எனும்போது. 0-6 மாத குழந்தைக்கு வரும் சிறுநீர் மிகவும் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை. குழந்தை எடை போடாமல் இருப்பது. நீங்கள் தாய்ப்பால் கொடுத்த பின்னரும் உங்களின் மார்பகம் சாஃப்டாக இருந்தால் தாய்ப்பால் குறைவாக சுரக்கிறது என அர்த்தம்.