எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? how-long-can-you-breastfeed.?

எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? how-long-can-you-breastfeed.?


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
How-many-times-a-day-how-long-can-you-breastfeed.

பிறந்த குழந்தைக்கு தாய் ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்
சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடம் ஊறும் கெட்டியான மஞ்சள் நிற பால். தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன. சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள் உள்ளிட்ட பல நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும். மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை சீம்பால் அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும்.

 மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.

ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.

ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம். குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.