ஹெர்பல் ஹேர் டை - Home Made Herbal Hair Dye.

ஹெர்பல் ஹேர் டை  - Home Made Herbal Hair Dye.

வீட்டிலேயே ஹெர்பல் ஹேர் டை தயாரிப்பது எப்படி?


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

ஹேர் டை
இளநரை வருவது என்பது பொதுவான விஷயம் என்றாலும், அதை மறைக்க பலரும் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

ஹோம்மேட் ஹென்னா ஹேர் டை


தேவையான பொருட்கள்

மருதாணி பவுடர் - 1 கப்
அவுரி இலை பவுடர் - 1 கப்

செய்முறை

முதல்நாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள்.

மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் பூசிக்கொள்ளுங்கள்