சபரிமலை சில சிறப்புகள் - Sabarimala-Ayyappan

சபரிமலை சில சிறப்புகள் - Sabarimala-Ayyappan

சபரிமலை, எழில் மிகுந்த புனித பூமியாகும். ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை பற்றி சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.



     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

சபரிமலை
சபரிமலை, எழில் மிகுந்த புனித பூமியாகும். திருத்தலத்திற்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை பற்றி சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சபரிமலை: பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில், சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும் விட உயர்ந்து காணப்படுவது ‘சபரிமலை.’ இங்கு ஒவ்வொரு வருடமும் மகரசங்கராந்தி அன்று, ஜோதி வடிவில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் காட்சி தருவதாக ஐதீகம்.


யாக பூமி: பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்திருக்கிறார்கள் என்பது புராணங்களும், தல வரலாறும் சொல்லும் செய்தி. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாக பார்க்கப்படுகிறது.

பம்பை நதி: ராமனும், லட்சுமணனும், சீதாதேவியைத் தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது வனத்தில் இருந்த மதங்க முனிவர் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவரது குடிலில் நீலி என்ற பெண் இருந்தாள். அவள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளுக்கு ராம, லட்சுமணர்களை வரவேற்பதில் தயக்கம் இருந்தது.

இதை உணர்ந்த ராமபிரான், “மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்களில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடில்லை. உன்னை போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன்” என்று சொல்லி, அந்தப் பெண்ணை அழகான அருவியாக மாற்றி அருள்புரிந்தார். அதுவே பம்பை நதியாக மாறி, ‘தட்சிண கங்கை’ என்று பெயர் பெற்றது.

பம்பா உற்சவம்: மகிஷனின் சகோதரியான மகிஷியை, ஐயப்பன் வதம் செய்தார். இதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமியாகவும் சபரிமலை திகழ்கிறது. இங்குள்ள பம்பை நதிக்கரையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னர், விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு ‘பம்பா உற்சவம்’ என்று பெயர்.

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி:

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை தவமிருந்து வழிபட்டனர். அவர்களின் முன் தேவி தோன்றினாள். பின்னர் மூவரின் விருப்பத்திற்கேற்ப, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி யருளினாள். அந்த தரிசனத் தில் தேவியானவள், தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தியை வைத்திருந்தாள். அந்த சக்திதான் ‘மகா சாஸ்தா.’

இதனைக் கண்ட சிவனும், விஷ்ணுவும் ஏக காலத்தில் ‘இந்த மகாசக்தி தங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும்’ என்று மனதிற்குள் நினைத்தனர். அதை புரிந்துகொண்ட தேவி, அவர்கள் விருப்பம் நிறைவேற ஆசிபுரிந்தாள். அதன்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்துவந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் சாஸ்தா.

சபரி: ராமாயண காலத்தில், சபரி என்ற பெண் ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் பெற்றாள். அவள், ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களைக் கொடுத்து உபசரித்தாள். மேலும் பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்த தால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும் போற்றப்படுகிறது.

மகிஷன்: ரம்பாசுரனின் மகனாகப் பிறந்த மகிஷன், தவம் மேற்கொண்டு பிரம்மனிடம் அரிய பல வரங்களைப் பெற்றான். அதனால் விளைந்த ஆணவத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பராசக்தியை வேண்டினர். பராசக்தி, மகிஷனுடன் போர்புரிந்து அவனை சம்ஹாரம் செய்தாள். அதனால் பக்தி மார்க்க தர்மயுத்தம் நடந்த பலி பூமி என்று சொல்கிறார்கள்.