முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ் - Egg Potato Chops

முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ் - Egg Potato Chops

குழந்தைகளுக்கு முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ்
தேவையான பொருட்கள் :

முட்டை - 3,

 உருளைக்கிழங்கு (பெரியது) - 2,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
பட்டை - 1,
சோம்பு - கால் டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 6 பல்,
ரஸ்க் தூள் - 4 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ்

செய்முறை:

உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி, தோல் நீக்கி விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கள்.

மிளகு, சீரகம், பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டை மிக்சியில் போட்டு மசாலா தயாரித்துக்கொள்ளுங்கள்.

இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, நன்றாக வேகவிடுங்கள்.

ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் முக்கி, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது.