உயிரைக் காக்கும் ரட்சையும் (கையில் அணியப்படும் கயிறு)
அதனை செய்து பயன்படுத்தும் முறையும்.....
மந்திரித்த முடிக்கயிறுகள்...!!!
     
ஒரு மனிதனுடைய ஜனன ஜாதகத்தில் ஆறாவது இடம்தான் கடன், நோய், எதிரி மற்றும் வழக்குகளைப் பற்றிச் சொல்லும் பாவகமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் ஆறு வாரங்கள் அல்லது சதுர்த்தி திதிகளில் கடன் தீர்க்கும் கணபதிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லக் காரணம் குறிப்பிட்ட 6ம் ஸ்தானம் பாவக்கிரஹங்களின் ஆதிக்கத்தில் இருப்பதுதான். ஆறுமுறை வழிபடுவதால் படிப்படியாகக் கடன்சுமை குறைந்து மகிழ்ச்சி அடையலாம்.
பண்டை நாட்களில் அரசர்கள், சத்ரு மற்றும் ருணரோக நிவாரண ரட்சைகளைக் கட்டிக்கொண்டு நலம் பெற்றார்கள். இன்றும் அதிகமாக இலங்கையில் சிங்கள சகோதர்களில் இந்த பழக்கம் உண்டு.
பல கோவில்களில், தர்காக்களில், மாந்திரீகர்களிடத்தில் பலர் மந்திரிக்கப்பட்ட முடிக்கயிறுகளை வாங்கி அணிந்திருப்பதை காணலாம். தேர்ந்த மந்திர உபாசனை உள்ளவர்கள் கொடுத்தால் மட்டுமே இது வேலை செய்யும். இதை பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறேன். சிலர் இதனால் பயன் இல்லை என்று அறியாமையில் சொல்வதுண்டு. இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் கொடுக்க என்னால் முடியும். நமது கைகளில் உள்ள நாடியில் தான் உடலில் உள்ள வாதம்,பித்தம், கபம் போன்றவற்றை அறிய முடியும்.மேலும் நாடியில் கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் குரு அமைந்துள்ளன. ஆகவே சிகப்பு,வெள்ளை, மஞ்சள் போன்ற முடிக்கயிறுகள் நம் நாடியில் பட்டு வர பல்வேறு பலன்கள் உண்டாகும். சிகப்பு அனுமனுக்கும் உகந்தது,மேலும் உடல் கோளாறுகள், மன கோளாறுகள் நீக்குவதிலும் இது சிறந்த பங்கு வகிக்கிறது.
குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தேவையான பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தவாரே முடி போடுதல் தான் முடிக்கயிறு. இதன் மூலம் பல காரியங்களை செய்ய முடியும். கருப்பு நிற கயிறு திருஷ்டி, குழந்தைகளின் தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் செய்வினை போன்றவற்றிற்கும், சிவப்பு நிற கயிறு பல வித சித்து, வசியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கும் உபயோகப்படுத்தலாம். தெய்வீக சக்திகளை பெற, சுபமுண்டாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கயிரும்,வெள்ளை உடலில் சக்திகள் விரயமாகாமல் தடுப்பதற்கும் பயன் படுத்த வேண்டும்.
சித்தர்கள், மாமுனிகள் பல முன்னோர்கள் புஜத்தில், கழுத்தில் மற்றும் கணுக்காலில் முடிக்கயிறுகள் உபயோகித்து வந்ததை நாம் யாவரும் அறிந்திருப்போம். 36,108,1008 என பல்வேறு எண்ணிக்கையில் முடிக்கயிறு இடலாம். இவற்றின் சக்தி குறிப்பிட்ட கால அளவே இருக்கும்.பின்பு மாற்றி விட வேண்டும்.சூரிய உதயத்திற்கு முன் விடிகாலையில் சுத்தத்துடன் கட்டுபவரும், கட்டப்படுபவரும் வடக்கு முகமாக நின்று கட்ட சக்தி மிகும்.கிரகங்களுக்காக கட்டி கொள்வதென்றால் ஞாயிறு சிகப்பும், திங்கள் கிழமை வெள்ளையும், வியாழக்கிழமை மஞ்சளும் நாமே கட்டி கொள்ளலாம்.பலன் தரும். இது போன்று விபூதி, குங்குமம் போன்றவற்றில் சக்திகள் ஏற்றி கொடுப்பதும் முறையில் உள்ளன.
அதேபோல சாதாரண மனிதர்களும் எளிய முறையில் ருணரோக நிவாரண ரட்சைகளை செய்து கைகளில் அணிந்து கொள்ளலாம். ரட்சை என்றால் உயிரைக் காப்பது என்று பொருள். இது சாதாரண வண்ணக் கயிறு போன்று இன்று பல இடங்களில் முறையற்ற வகையில் விற்கப்படுகிறது. 3x3 அளவுள்ள தாமிரத் தகட்டில், பலன் வேண்டி எந்தக் கடவுளை பூஜை செய்கிறோமோ, அந்தக் கடவுளின் பீஜாட்சரத்தை எழுதி, அதில் 16 முடிச்சுகள், 7 முடிச்சுகள் இட்ட சிவப்பு அல்லது பஞ்சவர்ணக் கயிறை வைத்து பூஜை செய்து ஒரு வட்டமான டப்பாவில் வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.
பிறகு, வெளியே செல்லும்போது கயிறைக் கையில் கட்டிக்கொண்டு செல்வது முறை. இப்படியாக ரட்சையைச் செய்து அறுகம்புல், செவ்வரளி, வில்வம் மற்றும் முல்லை மலரால் அர்ச்சனை செய்து வந்தால் கடன், நோய், எதிரி மற்றும் வழக்கு போன்ற எப்படிப்பட்ட பிரச்சனையையும் சமாளித்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
ஓம் கங் கணபதையே நமஹ !!
ஓம் க்ரீம் காளியை நமஹ !!
ஓம் ஸ்த்ரீம் தாராயை நமஹ !!
ஓம் ஹ்ரீம் நமசிவாய !!
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
அதனை செய்து பயன்படுத்தும் முறையும்.....
மந்திரித்த முடிக்கயிறுகள்...!!!
One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753ஒரு மனிதனுடைய ஜனன ஜாதகத்தில் ஆறாவது இடம்தான் கடன், நோய், எதிரி மற்றும் வழக்குகளைப் பற்றிச் சொல்லும் பாவகமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் ஆறு வாரங்கள் அல்லது சதுர்த்தி திதிகளில் கடன் தீர்க்கும் கணபதிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லக் காரணம் குறிப்பிட்ட 6ம் ஸ்தானம் பாவக்கிரஹங்களின் ஆதிக்கத்தில் இருப்பதுதான். ஆறுமுறை வழிபடுவதால் படிப்படியாகக் கடன்சுமை குறைந்து மகிழ்ச்சி அடையலாம்.