குருவின் ஸ்லோகம் (Guru Bhagavan Mantra) - குரு தோஷம் விலக

 குருவின்  ஸ்லோகம்  ( Guru Bhagavan Mantra)- குரு தோஷம் விலக 
Guru-Bhagavan-Mantra.
குரு தோஷம் விலக, குருவின் திருவருள் கிட்ட ஸ்லோகம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வியாழக்கிழமைகளில் இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

குருப்ரஹஸ்பதிர்ஜீவ, ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:

 தயாகர: ஸௌம்யமூர்த்தி: ஸுராசார்ய: குட்மலத்யுதி:

- ஸ்கந்த புராணத்தில் உள்ள குரு ஸ்துதி

பொதுப்பொருள்: குரு, ப்ரஹஸ்பதி, ஸுராசார்யர், வாகீஸர், தீர்கஸ்மஸ்ரு, பீதாம்பரர், யுவர், கிரஹாதீசர், கிரகபீடாஹரர், தயாகரர், ஸெளம்யமூர்த்தி, குட்மலத்யுதி என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானே நமஸ்காரம்.

வியாழக்கிழமைகளில் ஸ்கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ள இத்துதியை படித்தால் தீராத வயிற்றுவலி நீங்கும். பலம், தீர்க்காயுள், வாரிசு, பொருள் வளரும். பாவங்கள் விலகும். குரு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். 

பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கான காரணங்கள்

பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கான காரணங்கள்
Pariharam-reasons.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, இதற்கு காரணம் நமது கர்மவினைகளாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது எந்த கர்மவினையானது நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் பலனளிக்கும்.

மூன்று வகையான கர்மாக்கள் உள்ளது. அவை ’த்ருத கர்மா’ தெரிந்தே செய்த பாவம், ’த்ருத அத்ருத கர்மா’ தெரிந்தே செய்த தப்பினை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பது, ’அத்ருத கர்மா’ தெரியாமல் செய்த தவறு.


பரிகாரங்கள்

த்ருத கர்மா

தெரிந்தே முன் ஜென்மத்தில் பிறருக்கு துன்பம் தரக்கூடிய குற்றங்களை செய்த பாவமாகும். பிறரின் சொத்தினை அபகரித்து கஷ்டப்படுத்தியது, பணத்திற்காக கொலை செய்தது, தாய் தந்தையரை கஷ்டப்படுத்தியது இவற்றிற்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன், குரு ஆகியோர்க்கு தொடர்போ அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அனுபவித்துதான் தீர வேண்டும். பாவங்கள் அடுத்த தலைமுறையினரை பாதிக்காமல் இருக்க அன்னதானம் அடிக்கடி செய்யவேண்டும்.

த்ருத அத்ருத கர்மா

முற்பிறவியில் நல்லது நடக்கும் என நினைத்து செய்திருப்போம். ஆனால் அது தீங்கினை விளைவித்திருக்கும். தீயவர்களின் குணம் அறியாமல் நாம் செய்த உதவி மற்றவர்களை பாதித்ததை அறிந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இருப்போம். இந்த ஜென்மத்தில் ஜாதகரீதியாக தெய்வபரிகாரங்கள் செய்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோர்க்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும்.

அத்ருத கர்மா

மன்னிக்ககூடிய சிறிய குற்றங்களை தெரியாமல் மறுபிறவியில் செய்வதாகும். இதற்கு பரிகாரங்கள் தேவை இல்லை. மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்டாலே போதுமானதாகும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருக்கும்.

ஏகாதசி விரதம் தோன்றிய புராண வரலாறு

ஏகாதசி விரதம் தோன்றிய புராண வரலாறு
Ekadasi-viratham- History

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.


விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம். 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்
shiva-temple.
அகத்திய முனிவருக்கு நோய்கள் குணமாக்கும் மருந்துகளை உபதேசித்தருளிய  திருத்தலம்

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது.

பிருங்கி முனிவர் ஒருமுறை திருக்கயிலாயம் சென்று, சிவபெருமானை மட்டும் வழிபட்டார். அருகில் இருந்த உமையவள் ஈசனோடு உரசியபடி அமர, அப்போதும் வண்டு உருவம் கொண்டு ஈசனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார் பிருங்கி முனிவர். கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரின் சக்தியை தன்னுள் கிரகித்துக் கொண்டார். இதனால் முனிவரால் நடக்கக்கூட முடியவில்லை. உடனே சிவபெருமான் அவருக்கு ஊன்றுகோல் வழங்கினார்.

அனைவருக்கும் சக்தியும் சிவனும் ஒன்றே என்று உணர்த்த, சிவனில் சரிபாதியை பெறுவதே சரியானது என்று பார்வதி முடிவு செய்தாள். அதன்படி அம்பாள் மேற்கொண்ட விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘கேதாரம்’ என்பது இமயமலைச் சாரலில் உள்ள சிவ தலம் ஆகும். கவுதம முனிவரின் வழிகாட்டுதல்படி, கேதாரத்தில் உள்ள சிவபெருமானை நினைத்து பார்வதி தேவியாக ‘கவுரி’ இருந்த விரதம் என்பதால் ‘கேதார கவுரி விரதம்’ ஆனது. அதன் வாயிலாக ஈசனின் சரிபாதியைப் பெற்றார் என்பது வரலாறு.


இதையறிந்த பிருங்கி முனிவர், தான் செய்த தவறுக்காக பல சிவ தலங்களுக் குச் சென்று வழிபாடு செய்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை திருவான்மியூராக இருக்கும் பகுதிக்கு வந்து அங்குள்ள அமுதீஸ்வரர், சொக்கநாயகி அம்மன் ஆகியோரை வழிபாடு செய்தார். அப்போது அம்பாள், முனிவருக்கு மீனாட்சி, காமாட்சி, மூகாம்பிகை, காந்திமதி என அத்தனை சக்தி வடிவங்களையும் தன்னுள் காட்டி நின்றாள். இதனால் இத்தல அம்மனை ‘திரிபுரசுந்தரி’ என்றும் அழைக்கிறார்கள். இத்தல அம்மனை வழிபடுவதால் உலகிலுள்ள அனைத்து திருக்கோவில் களிலும் உள்ள அம்பாளை வழிபட்ட பெரும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தின் மேற்கில் உள்ள சிறுகுன்றில் பிருங்கி மகரிஷி சில காலம் தங்கி, திருவான்மியூர் ஈசனை வழிபட்டு வந்தார். ஆகையால் இத்தல ஈசனும் மேற்கு நோக்கி கோவில் கொண்டுள் ளார். எனவே தான் இத்தல ஈசன் மேற்குநோக்கி கோவில் கொண்டுள் ளார் என்கிறார்கள். அப்பய்ய தீட்சிதரின் பொருட்டும் ஈசன் மேற்குநோக்கி அருளலானார் என்றும் கூறுகிறார்கள். பிருங்கிமுனிவர் தங்கியிருந்து திருவான்மியூர் ஈசனை வழிபட்டுவந்த அந்த சிறுகுன்று ‘பிருங்கி மலை' ஆனது.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப் பட்ட அமிர்தத்தால், தேவர்கள் அனை வரும் இத்தல ஈசனை வழிபட்டனர். அதனால் இத்தல இறைவன் அமுதீஸ் வரர் ஆனார். திருவான்மியூர் ஆலயத் தின் மூலவர் கருவறையின் பின்புறம், அதாவது கிழக்குப்பகுதியில் கேதார கவுரி விரதத்தின் நாயகன் கேதாரீஸ் வரரை தனிச்சன்னிதியில் கண்டு தரிசிக்கலாம். இவரை வழிபடுவதால் வறுமை, பிணி அகலும். கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும். திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கைத் துணை அமையும்.

அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது. எனவே தான் இங்கு சுயம்புவாய் அருளும் ஈசனை ‘மருந்தீஸ்வரர்’ என்கிறோம். இங்கு வழங்கப்படும் ஈசனின் திருநீறு, நம் நோய்களை நீக்கும் வல்லமை உடையது.

இங்கு உள்ள பாவநாசினி தீர்த்தத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடி இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தவறான வழியில் செல்லும் பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். ஆலயத்தில் தினமும் அதிகாலை யில் கோ பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் தொடர்ந்து 21 நாட்கள் தவறாமல் கலந்து கொண்டால், நம் கர்மவினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.

பிரம்ம தேவனின் மகனான ரட்சசு, நாரதரின் வழிகாட்டலின் படி இத்தல ஜென்ம நாசினி தீர்த்தத்தில் நீராடி, மருந்தீஸ்வரரை வழிபாடு செய்தான். இதனால் அவனுடைய பெண்ணுருவம் மறைந்து மீண்டும் ஆண் உருவத்தைப் பெற்றான் என்கிறது தல புராணம். எனவே இத்தல ஜென்ம நாசினி தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஈசனை வழிபட்டால், மலட்டுத் தன்மை, ஆண்மை குறைபாடு முதலியன நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வால்மீகி முனிவருக்கு ஈசன் இங்கு காட்சி தந்ததால் ‘வான்மீகியூர்’ ஆகி வான்மியூர், திருவான்மியூர் ஆனது. காமதேனு ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டதால் இத்தல மருந்தீஸ்வரரை ‘பால் வண்ண நாதர்’ என்றும் அழைக்கிறார்கள். சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் மருந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்
coconut-oil-apply-to-lips.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது.


இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் கிரிம்களும் கிடைக்கின்றன. வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும்.

வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

சிவப்பு அரிசி - Red Rice Benefits

சிவப்பு அரிசி - Red Rice Benefits
ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான சிவப்பு அரிசி
Red-Rice-Benefits.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும்.

சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.

முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான்.


மாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.

இதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது.

இன்னும், ஆஸ்துமா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், மாரடைப்பைத் தவிர்ப்பதில், பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில்... என இதன் பலன்கள் பட்டியல் வெகு நீளம்.

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.

பெண்கள் பணத்தை சேமிக்க வழிகள்

பெண்கள் பணத்தை சேமிக்க வழிகள்
Ways-to-Save-Money-on-Women.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர்.

தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.


• சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

• நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

• பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

• ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

• முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

• வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

• பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம். 

பெண்களே பிறப்புறுப்பு எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா?

பெண்களே பிறப்புறுப்பு எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா?
Stop-Vaginal-Itching-and-Burning


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.

பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.

வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். அவை கையில் இல்லாவிட்டால் அவசரத்திற்கு பாடி லோஷனைக் கூட பயன்படுத்தலாம்.

 வறட்சிப் பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறையும்போதுதான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் நீர்ச்சத்து உடலில் குறையாமல் இருக்கும். மேலும் ஜூஸ் போன்றவற்றையும் அடிக்கடி குடிக்க வேண்டும்.

உறவின்போது அதிக அளவில் வலி இருந்தால் பிறப்புறுப்பு வறண்டிருக்கலாம். அதுபோன்ற சமயத்தில் உறவை நிறுத்துவதுதான் நல்லது. இல்லாவி்ட்டால் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.

கிரீம், ஜெல் போட்டும் கூட பிறப்புறுப்பு வறட்சி போகாவிட்டால் டாக்டரைப் பார்ப்பது நல்லது. ஏதாவது தொற்று ஏற்பட்டிருந்தால் கூட பிறப்புறுப்பு வறண்டு போகலாம். சில ஆணுறைகள் கூட பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தக் காரணமாக அமைகிறதாம்.

இப்படிச் சின்னச் சின்னதாக பிறப்புறுப்பு வறட்சியைச் சமாளிக்க நிறைய வழிகள் உண்டு. உரியவற்றை செய்து உல்லாசத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

தினை ஆப்பம் - Thinai Appam.

தினை ஆப்பம் - Thinai Appam.

சத்து நிறைந்த தினை ஆப்பம்
Thinai-Appam.

தினை ஆப்பம் - Thinai Appam.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



சிறு தானிய வகைகளில் ஒன்றான தினை ருசியுடன் கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. தினையை பயன்படுத்தி சுவையான ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தினை - 2 கப்

 இட்லி அரிசி - கால் கப்
வெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ - 1 கப்
வடித்த சாதம் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - 2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும். மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.

ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.

மீன் முட்டை பிரை - Fish Egg Fry.

மீன் முட்டை பிரை - Fish Egg Fry.
சூப்பரான மீன் முட்டை பிரை
Fish-Egg-Fry.

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மீன் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா?. சூப்பராக இருக்கும். இன்று மீன் முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மீன் முட்டை - 200 கிராம்

 வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.

மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.

மூக்கு( NOSE)பற்றிய முக்கிய தகவல்

மூக்கு( NOSE)பற்றிய முக்கிய தகவல்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பொதுவாக நாம் மூக்கு பற்றி அதிகம் பேசுவதில்லை. அது பற்றிய தகவல்களும் அவ்வளவாக வெளிவருவதில்லை. நாம் உயிர் வாழ முக்கியத் தேவையான, சுவாச மண்டலத்தின் மிக முக்கியமான பகுதியான மூக்கு பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?! மூக்கின் உட்புறம் கோழை மற்றும் முடியினால் சூழப்பட்டுள்ளது. மூச்சுக்காற்று சூடாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் காணப்பட்டு பாக்டீரியா அல்லது அழுக்கு நுரையீரலைச் சென்றடையும் முன்பு வடிகட்டப்பட்டுவிடுகிறது. மூக்கு, நுகர்தலுக்கான உறுப்பும்கூட. அது சைனெஸஸ் (Sinuses) எனும் காற்றுக் குழியறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

* சைனஸ் அழற்சி என்பது மூக்கிற்குள் திறக்கும் சைனஸிஸ் எலும்பில் உள்ள, குழிப்பையில் ஏற்படும் திடீர் அல்லது நாள்பட்ட அழற்சி ஆகும். இது ஒவ்வாமையினாலோ தொற்றினாலோ அல்லது இவை இரண்டினாலுமோ உண்டாகலாம்.

* கெட்ட வாசனையுடன் கூடிய மூக்கில் கெட்டியான கோழையால் மூக்கு அடைத்துக் கொள்ளும்போது தலைவலி உண்டாகலாம். சில நேரங்களில் காய்ச்சல் இருக்கலாம்.

* சளி ஏற்பட்டு மூக்கடைப்பும் இருக்கும்போது, மூக்கைச் சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள். சிறிதளவு உப்பு நீரைக் கையில் ஊற்றி மூக்கினுள் உறிஞ்சுங்கள். இது சளியை இளகச் செய்ய உதவும். சாதாரணமான தண்ணீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது சுகாதாரமான தண்ணீராக இருக்க வேண்டியது அவசியம்.

* மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாகப் பலருக்கும் ஏற்படுகிறது. இது அதிகம் தொல்லை கொடுக்கக் கூடியதெனினும் இது மிகப்பெரிய மருத்துவப் பிரச்னை அல்ல. ஆனால், இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது என்பதில் பிரச்னையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.

* குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் மூக்கினுள் உள்ள நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஆரம்பமாகிறது. இந்த நடுச்சுவரே உங்கள் மூக்குக் குழியினை இரண்டாகப் பிரிக்கிறது. நடு வயதினருக்கும் வயதானவர்களுக்கும் நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உள் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால், இவ்வகை ரத்தக்கசிவுகள் அரிதானவையே. இவை தடித்த ரத்த நாளங்களாலும் ரத்த மிகை அழுத்தத்தாலும் ஏற்படலாம்.

* சில சமயம் மூக்கில் ரத்த ஒழுக்கு தானாக ஏற்படுகிறது. இதனை நிறுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும். இதற்கு மருத்துவரின் உதவி தேவைப்படும்.

* மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டவுடன் உட்கார்ந்து விடுங்கள். இது மூக்கின் சிரைகளில் உள்ள ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தம் வெளியேறுவதையும் குறைக்கும்.

* மூக்கைப் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு வாயால் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். இது நடுச்சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த வெளியேற்றத்தை நிறுத்தும்.

* சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ளவாறு பார்த்துக் கொள்வது, மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படும்.

* ஒருமுறை மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டு நின்ற பிறகு, மூக்கைக் குடைவது, சிந்துவது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. சில மணி நேரங்களுக்குக் குனியக்கூடாது. இதயத்தைவிடத் தலையை உயரமாக வைத்துக் கொள்ளவும்.

* மீண்டும் ரத்த ஒழுக்கு ஏற்பட்டால், அழுத்தமாக மூக்கை உள்புறமாக உறிஞ்சுவதால் உள்ளே ரத்த உறைவுக் கட்டிகள் நீங்கிவிடும். மீண்டும் ரத்தப்போக்கு இருப்பின் மேலே கூறியபடி மீண்டும் மூக்கை அழுத்திப் பிடித்து வாயால் சுவாசிப்பதுடன் மருத்துவ உதவியை நாடவும்.   15 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ரத்தக்கசிவு நீடித்தாலோ, பாதிப்புக்குள்ளானவர் தளர்வாகவோ மயக்கம் வருவதுபோலவோ உணர்ந்தாலோ மருத்துவ உதவி அவசியம்.

* அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* ஒருவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டினால் நாசித் துவாரங்களினுள் தினமும் வாசலின் தடவவும். அல்லது உப்பு நீரை முகரவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற (வைட்டமின் சி அடங்கிய) பழங்களைச் சாப்பிடுவது சிரைகள் வலுப்பெற உதவும்.

*  குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தில்லாக் கட்டிகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இது பெண்களைக் காட்டிலும் பருவ வயது ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பருவ வயது தாண்டியதும் இது தானாகச் சரியாகிவிடும். ஆனால், சிலருக்குக் கட்டிகள் வளர்ந்து மூக்குத் துவாரத்தையும், சுவாசப் பாதையையும் அடைத்து வேறு அறிகுறிகளையும், ரத்த ஒழுக்கையும் ஏற்படுத்தலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகள் தானாகச் சுருங்காதபோது மருத்துவரை அணுகவும். அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்.

* மூக்கடைப்பானது மூக்கின் சளிச்சவ்வுப் படலங்களில் நீர் தேங்கி இருப்பதுடன், அடைப்பு ஏற்படுத்தி மூச்சு விட சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் மூக்கடைப்பு தொல்லை கொடுக்கும் ஓர் அறிகுறியாகவே இருக்கும். மூக்கடைப்பு சளிச்சவ்வுக் கட்டிகள், கட்டிகள், பெருத்த அடினாய்டுகள், வெளிப்பொருட்கள் அடைப்பாலும் ஏற்படுகிறது. மூக்குப் பாதை அமைப்பில் மாறுபாடுகள் மூக்குக்குழியின் இரு பக்கத்தையும் குருத்தெலும்பு மற்றும் எலும்பு ஆகிய இருவகைகளாலான தடுப்புச்சுவர் பிரிக்கிறது. இந்த நடுச்சுவர் காயம் காரணமாக இயல் பமைப்பிலிருந்து மாறுபட வாய்ப்புள்ளது.

*  ஒவ்வாமை காரணமாக மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தில் அழற்சி ஏற்படும். ஒவ்வாமையைத் தூண்டும் பொருட்களான மகரந்தம், வீட்டுத் தூசு போன்றவை காற்றில் கலந்து மூக்கு வழியாக இவை உள்ளே நுழைகின்றன. நாள இயக்க மூக்கழற்சி இது விட்டு விட்டு ஏற்படும் மூக்கழற்சியாகும். புகை, குளிரூட்டும் இயந்திரங்கள் மற்றும் கடும் உடற்பயிற்சியினால் ஏற்படும்.

* மூக்கில் சளியும், சளி உறைவும் தேங்கினால் தினமும் மென்மையாக மூக்கைச் சிந்தவும். அடிக்கடி மூக்கடைப்பைச் சரிசெய்யும் சொட்டு மருந்தையோ தெளிப்பான் வகை மருந்துகளையோ பயன்படுத்தினால் தொடர்ந்து அதனைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடலாம்.

* நீண்ட நாட்கள் இவ்வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால் மூக்கினுள் உள்ள சளிச் சவ்வுப் படலம் பாதிக்கப்பட்டு நாற்றம் அல்லது எரிவது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். இது நாள்பட்ட அழற்சியின் அறிகுறியாகும். இதனைத் தடுக்கச் சிறந்த வழி மூக்குச் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தாதிருப்பதே ஆகும். அப்படி பயன்படுத்தினாலும் மூக்கடைப்பிற்கான சொட்டு மருந்துகளை 3 முதல் 4 நாட்களுக்குமேல் பயன்படுத்தாதீர்கள்.

* மூக்கு சொட்டுமருந்துக்குப் பதிலாக உட்கொள்ளும் மருந்துகளைப் பயன்படுத்தலாம். முதலில் மூக்கடைப்பு உடனடியாகச் சரியாகாவிடினும், சில வாரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைமை திரும்பக்கூடும்.

* சைனஸ் என்பது எலும்பு உட்புழைகளில் அல்லது மண்டை ஓடு மூக்குடன் சேர்கிற பகுதியிலுள்ள துவாரங்களில் உண்டாகிற சுழற்சியாகும். வலி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை சைனஸ் அழற்சியாக இருக்கலாம்.

* கைக்குழந்தைகளுக்கு புட்டிப்பால் தர வேண்டாம். அப்படி தர வேண்டுமானால் குழந்தையை மல்லாந்து படுக்க வைத்துப் பால் தர வேண்டாம். ஏனென்றால் பால் மூக்கு வரை சென்று காதில் தொற்று ஏற்படக் காரணமாகலாம்

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்
Why-men-are-leaving-their-wives.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்வதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக பல தம்பதிகளிடையே ஆயிற்று’  ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.
முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!


 திருமணமான தொடக்கத்தில்  இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்ட செல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கிடையிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.

இருவரும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர்மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.

மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு  உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருப்பதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை  விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம்.



பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள்  எப்பொழுதும் தங்களது துணை  தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.

மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு  தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது.

குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு  குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

இதற்காக  எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஆண்களை, பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். 

மசாஜ் விளையாட்டு - Couples Massage Game

மசாஜ் விளையாட்டு - Couples Massage Game
துணையை கவரும் மசாஜ் விளையாட்டு


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.

மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.

எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள்.

கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.

தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

கருஞ்சீரகம்( karunjeeragam)-கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும்

 கருஞ்சீரகம்( karunjeeragam)-கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும்
karunjeeragam-oil-for-hair.
கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கருஞ்சீரகம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.

தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகள்:

கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லி, வல்லாரை, செம்பருத்தி, ஆவாரம்பூ, வெந்தயம், வலம்புரி, இடம்புரி, தேவதாரு, சந்தனம், வெட்டிவேர், கார்போக அரிசி, ரோஸ் மேரி இலை, போன்ற மூலிகைகளை இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ கண்ணாடி குப்பியில் நிறைத்து நல்ல வெயிலில் வைத்து நிறம் நன்றாக மாறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி மிகவும் நேர்த்தியாக வளரவும் உதிராமலும் இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.


இந்த எண்ணெயுடன் திருநீற்று பச்சிலை, தைலமர எண்ணெய், இஞ்சி, பூண்டு எண்ணெய்களை சிறிது கலந்து தேய்த்தால் பேன், பொடுகு, புழுவெட்டு தொல்லைகள் சரியாகிவிடும். இளநரையை தடுக்க இத்துடன் பாதாம், ஆப்ரிகாட், முருங்கை எண்ணெய்களை கலந்து பயன்படுத்தினால் முழுமையான பலன் கிடைக்கும்.


அக சுரப்பிகளின் குறைகளால் முடியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய: கருஞ்சீரகம், திரிகடுகம், கரிசலாங்கண்ணி, வல்லாரை, முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இவைகளை கலந்து கசாயம் செய்து அல்லது இத்துடன் தேங்காய், பேரிச்சை, திராட்சை கலந்து சாறு செய்து சாப்பிட்டால் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து கிடைப்பதுடன், முடி நன்றாகும். மூளை நன்றாக வேளை செய்யும், மனம் அமைதியுறும். செரிமான உறுப்புகள் மிகச்சரியாக இயங்கும்.

கருஞ்சீரக எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள் உங்கள் முகப்பொலிவை பார்த்து. இந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்தினால் முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.

தடாசனம் - Tadasana குதிகால் வலியை போக்கும்

தடாசனம் - Tadasana குதிகால் வலியை போக்கும்
Tadasana.
குதிகால் வலியை போக்கும் தடாசனம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். இந்த ஆசனம் கால் வலி, குதிகால் வலியை போக்குகிறது.

தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். “தடா” என்றால் மலை குன்று போல் ஸ்திரமாக நிற்பதை குறிக்கும் ஆசனமிது. நின்ற கொண்டு செய்ய வேண்டிய ஆசனங்களை தொடங்கும் முன்பும், முடித்த பின்பும்  தடாசனம் செய்ய வேண்டும்.

செய்முறை:

விரிப்பில் நேராக நிற்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் அழுத்தமாக  வைக்கவும். முழங்கால்கள் வளையாமல் நேராக நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கி, இரண்டு கைகளையும் சேர்த்து வந்தனம் (நமஸ்காரம்) செய்வது போல் வைத்துக்  கொள்ளவும்.

மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக குதிகால்களை உயர்த்தவும். குதிகால்களை உயர்த்திய நிலையில் சில நொடிகள் நின்று, பிறகு மூச்சை விட்டபடி குதிகால்களை இறக்கி, நார்மல் நிற்கும் நிலைக்கு வரவும். 5 அல்லது 7 முறை திருப்பி செய்யவும். உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் தடாசனத்தை செய்வதை தவிர்க்க வேண்டும்.

பலன்கள் :

1. சரியாக நிற்கும் நிலையை கற்பிக்கிறது.
2. மனதுக்கு அமைதி தருகிறது.
3. உடலுறுப்புகளுக்கு ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது. இதனால் உடல் கழிவுகள் நீங்குகின்றன.
4. தடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் செக்ஸ் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெற்று நன்கு செயல்படும். பாலியல் திறன் அதிகரிக்கும்.
5. கால்கள் வலுப்பெறுகின்றன.
6. குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி, செக்ஸ் சக்திகளை ஊக்குவிக்கிறது.

கம்பு பாலக் ரொட்டி - Bajra Palak Pathiri

கம்பு பாலக் ரொட்டி - Bajra Palak Pathiri
சத்து நிறைந்த கம்பு பாலக் ரொட்டி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - 1 கப்

 ப. மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.

ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.

நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

சுவையான கம்பு பாலக் ரொட்டி ரெடி