அழகை மேம்படுத்தும் முத்திரைகள்- Beauty-Mudra

அழகை மேம்படுத்தும் முத்திரைகள்- Beauty-Mudra
Beauty-Mudra

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

நீர் முத்திரை

சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்

பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.

பங்கஜ முத்திரை

சப்பளங்கால் இட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல் வைக்க வேண்டும். இரண்டு கைகளின் கட்டைவிரலும், சுண்டு விரலும் முழுமையாக ஒட்டியிருக்க வேண்டும். மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைக்க வேண்டும். 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்: மனமகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் உண்டாக்கி, முகமலர்ச்சியை உண்டாக்குகிறது. முகம் பொலிவடைகிறது.

மகா சிரசு முத்திரை

மோதிரவிரல், உள்ளங்கை நடுவில் தொட்டிருக்க வேண்டும். நடுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்: சிரசாசனம் செய்வதற்குரிய பலனை இந்த முத்திரை தரும். இதனால், தலைக்கு சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. தலை, முகத்தில் மசாஜ் செய்ததுபோல், முகத்தின் தசைகள் ஓய்வு பெறுகின்றன. நெற்றி, கன்னம், மூக்கின் மேல் ஏற்படும் கருமைப்படலம் மறைகிறது. முகம் பளிச்சிடும்.

பிராண முத்திரை

மோதிரவிரல், சுண்டுவிரல், கட்டைவிரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கைகளிலும் செய்யலாம். 20 - 40 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

பலன்கள்: ஆக்சிஜன் பயன்பாடு குறையக் குறைய, வயோதிகமும் சோர்வும் அதிகமாகிறது. இது, அனைத்து நோய்களுக்கும் வாசலாக அமைகிறது. தொடர்ந்து பிராண முத்திரை செய்துவர, உடல் சோர்வு, மந்தம், களைப்பு சரியாகும். கூந்தலும் சருமமும் உயிரோட்டம் பெறும்.