குழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்

குழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்
Parents-access-children.


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

குழந்தைகள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். களைப்பாகும் வரை விளையாடுவார்கள், கலகலவெனப் பேசுவார்கள், திடீரென அமைதியாகிவிடுவார்கள், சட்டென பூரிப்படைவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட குணம் என்று ஒன்றிருக்கும்.

குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கே!


சில குழந்தைகள் எல்லா இடங்களிலும் தாங்கள்தான் முதலாவதாக, முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தன்னுடைய இலக்கு இதுதான் என முடிவு செய்து, அதில் ஜெயிப்பதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து செய்துகொண்டிருப்பார்கள். அதிகம் யோசிப்பார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் வெளியே பேசாத, யாரிடமும் பகிராதவர்களாக இருப்பார்கள். அதுவே, அவர்களின் பெற்றோர் வருந்துவதற்கான காரணமாக இருக்கும்.

இவர்களைப் பற்றி வருந்த எதுவுமில்லை. தங்களின் இலக்கைத் துரத்தும் வேகத்தில் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் துண்டித்திருப்பார்கள். ஆனால், நாம் வலியச்சென்று பேசும்போது நிச்சயம் காது கொடுப்பார்கள். அப்படிப் பேசும்போது ‘முதல் மதிப்பெண், முதல் பரிசு இதெல்லாம் மட்டும் வெற்றியல்ல. மற்றவர்களுக்கு உதவுவதும், விட்டுக்கொடுப்பதும் முக்கியம். தோல்வி தரும் அனுபவங்களும் பாடங்களே’ என்று வலியுறுத்தலாம்.

சில குழந்தைகள் நேர்த்தியை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். புத்தகம், பொம்மை என தனது பொருட்களை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது தொடங்கி, தனது தட்டு தூய்மையாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்பதுவரை, அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் 100 சதவிகிதம் பெர்ஃபெக்‌ஷனை எதிர்பார்ப்பார்கள். ‘நல்ல விஷயம்தான். ஆனா, அதிலேயே அதிக நேரத்தை விரையமாக்குறா’ என்பது பெற்றோரின் புகாராக இருக்கும்.

இவர்களுக்கு ஸ்மார்ட் வொர்க்கை கற்றுக்கொடுக்க வேண்டும். ஹோம்வொர்க் செய்ய வேண்டிய நேரத்தில் தனது புத்தக அலமாரியை அடுக்கிக்கொண்டிருக்க்கூடாது என சொல்லுங்கள். ‘அதிகம் பயன்படுத்துகிற பொருட்களை முன்னாடியும் பயன்படுத்தாத பொருட்களை பின்னாடியும் வைத்தால், எடுக்கச் சுலபமாக இருக்கும், அடிக்கடி கலைந்துபோகின்ற பிரச்னையும் இருக்காது’ என ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களைப் பழக்கலாம். இதன் மூலம் தங்களின் நேரத்தைச் சேமிக்க வைக்கலாம்.

சில குழந்தைகள் எப்போதும் நண்பர்களுடனே இருப்பார்கள். அவர்கள் இருந்தால்தான் இவர்கள் முகத்தில் சந்தோஷத்தையே பார்க்க முடியும். பெரும்பாலும் இவ்வகை குழந்தைகள் படிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

திருத்துவதாக நினைத்து, இவர்களைப் பெற்றோர் அவர்களின் குழுவில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. அது அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும். ட்யூஷன், குரூப் ஸ்டடி, குழுவாக சேர்ந்து தோட்டம் அமைப்பது போன்ற குழு செயல்பாடுகளின் மூலம் அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்.