தென்குமரி திருமலை - kanyakumari-venkatachalapathy-temple

தென்குமரி திருமலை - kanyakumari-venkatachalapathy-temple
kanyakumari-venkatachalapathy-temple


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.

முக்கடலும் சங்கமிக்கும் தென்முனையில், அன்னை உமையவள் கன்னியாக, குமரியாக எழுந்தருளி நித்திய தவம் இருக்கும் திருத்தலமே கன்னியாகுமரி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. அதுபோல இங்கு பெண் சித்தர் மாயம்மா திருமடம், குகநாதேஸ்வரர் திருக்கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், குமரி பகவதி அம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. சுவாமி விவேகானந்தர் குமரிக்கு விஜயம் செய்த போது குமரி அன்னையை தரிசித்து கடலுக்குள் சிறிது தூரம் நீந்திச் சென்று, அங்குள்ள பாறையில் தியானம் செய்தார்.

இத்தகைய அருள் வழங்கும் ஆன்மிக பூமியில், திருவேங்கடம் வெங்கடாஜலபதியும் எழுந்தருளியிருக்கிறார் என்பது தனிச் சிறப்பாகும். திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு நடைபெறும் அன்றாட வைபவங்களும், திருவிழாக்களும் அதே நாளில் அதே நேரத்தில் இத்தலத்திலும் நடைபெறுகிறது.


திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் இங்கும் சிறப்பாக நடக்கும். திருப்பதி பிரசாதமான லட்டு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமைகளில் வினியோகிக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் தேர் ஓடும் வகையில், மாடவீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை ஒட்டி மடப்பள்ளி, வேதபாடசாலை, கோமடமும் அமைந்துள்ளன. திருமலையில் உள்ளது போன்றே ‘சுவாமி புஷ்கரணி' எனும் தீர்த்தக்குளமும் இங்குள்ளது.

வெங்கடாஜலபதி திருக்கோவில் மேல் தளம், கீழ் தளம் என இருதளங்களுடன் கொடிமரம், மகாமண்டபம், ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் உள்ளன. மேல்தளத்தில் மூலவர் திருப்பதி ஏழுமலையான் எனும் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருட பகவான் சன்னிதிகள் இருக்கின்றன.

கருவறையில் மூலவர் வெங்கடாஜலபதியின் திருப்பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி `சித்திரை விஷூ' நன்னாளில் சூரிய ஒளி விழும் வகையில் சிறப்பாக ஆலயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆறரை அடி உயரத்தில் ஏழுமலையான் அருள்தருவது ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. உடல்நோய்கள், மன நோய்கள், வறுமை, தரித்திரம், தோஷங்கள், துயரங்கள் அகலவும் இத்தல வெங்கடாஜலபதியை தரிசித்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும். முடிக் காணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து, திருமலையில் ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி), மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச் செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. ஏனெனில் மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?.

எனவே திருமணச் செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை வாங்கினார். அந்த கடனை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மஹாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்னும் இடத்தில் அலர்மேல் மங்கை எனும் பத்மாவதி தாயாரை இருத்தினார். பின்னர் தான் மட்டும் நின்ற திருக்கோலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் வெங்கடாஜலபதியாய், ஏழுமலையின் சிகரத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினார்.

வெள்ளிக் கிழமைகளில் திருமலை வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின் போது பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி திருஉலா நடைபெறுகிறது. இந்த அத்தனை விழாக்களும் திருமலை திருப்பதியில் நடைபெறும் அதேநாளில் அதே நேரத்தில், குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலிலும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் குமரி திருமலைதிருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் விவேகானந்தபுரம் இருக்கிறது.

திருப்பதி வரலாறு

கிருஷ்ண அவதாரத்தில் பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை தனது கரங்களால் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அம்மலையே கலியுகத்தில் திருவேங்கடமலையாய் வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறதாம்.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டிப் பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் எனும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும்பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக்கொன்று பூமாதேவியை மீட்டார். பின்பு பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார். அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள் கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு, தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் (வேம்-பாவங்கள், கடம்-எரித்தல்) எனவும், தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்- அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்) எனவும் இருவகை பொருளுண்டு. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி, ஆதலால் ‘திருப்பதி’ ஆயிற்று.