சிறப்பு வாய்ந்த புராண கதாபாத்திரங்கள்

சிறப்பு வாய்ந்த புராண கதாபாத்திரங்கள்
Legendary-characters.

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

கைகேயி

அயோத்தி மன்னனான தசரதரின் மனைவியர்களில் ஒருத்தி கைகேயி. இவள் பரதனின் தாய் ஆவாள். ஆரம்ப காலத்தில் கவுசல்யாவின் மகனான ராமனையும் தன் பிள்ளைப் போலவே பாவித்து வந்த கைகேயியின் மனதை, மந்தரை என்பவள் மாற்றினாள். அதன் காரணமாக, தசரதன் தனக்கு தருவதாக ஏற்கனவே சொல்லியிருந்த 2 வரங்களை இப்போது சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள், கைகேயி. அதன்படி ஒரு வரத்தால், ராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், மற்றொரு வரத்தால் தன்னுடைய மகன் பரதன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்றும் தசரதனிடம் வரம் பெற்றாள். இதனால் தான் ராமன், 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டி வந்தது.


கத்ரு

காசியப முனிவரின் மனைவியில் ஒருவள் கத்ரு. இவள் ஒரு முறை தன்னுடைய கணவரிடம், சக்திகள் படைத்த ஆயிரம் பிள்ளைகள் தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டாள். அதன்படி அவளுக்கு சேஷநாகா, வாசுகி, காலியா உள்ளிட்ட 1000 நாகங்கள் பிறந்தன. இவளின் சகோதரியே, கருட பகவானின் தாய் வினதை. கருடனின் தாயை, கத்ரு அடிமையாக வைத்திருந்த காரணத்தால், தாயை விடுவிக்க தேவேந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தார் கருட பகவான். தாயை அடிமையில் இருந்து மீட்டெடுத்ததும், மீண்டும் அமிர்த கலசத்தை தேவேந்திரனிடமே ஒப்படைத்து விட்டார் கருடன். இதனால் நாகர்களுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது என்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

கிஷ்கிந்தை

வானரங்களின் தலைமை இடமாக இருந்த பகுதியே கிஷ்கிந்தை என்று ராமாயணம் குறிப்பிடுகிறது. இந்த இடத்தை பலம் பொருந்திய வாலி அரசாட்சி செய்து வந்தான். ஒரு சில காரணங்களால் வாலிக்கும், அவரது தம்பி சுக்ரீவனுக்கும் பகை இருந்தது. இதனால் சுக்ரீவனை கிஷ்கிந்தையில் இருந்து விரட்டி விட்டதோடு அவனது மனைவியையும் அபகரித்துக் கொண்டான் வாலி. இந்த நிலையில் சீதையை மீட்பதற்காக சுக்ரீவனின் உதவியை நாடி வந்த ராமன், அவனுக்காக வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்றார். பின்னர் சுக்ரீவனை, கிஷ்கிந்தையின் அரசனாக்கினார். வாலியின் முன்பாக நின்று அவனை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பலத்தில் பாதி, வாலியை சென்றடையும் என்ற வரம் காரணமாக, ராமன் மறைந்திருந்து அவனைத் தாக்கினார் என்கிறது ராமாயண காவியம்.

காதம்பரி

உஜ்ஜையினி நகரத்து அரசன் சந்திரபீடன், கந்தர்வப் பெண்ணான காதம்பரி என்பவளை காதல் திருமணம் செய்து கொண்டான். இந்த வரலாற்றை இலக்கியமாக சொல்லிய நூல் தான் ‘காதம்பரி.’ இந்த நூலை ஹர்சவர்த்தன் என்ற அரசனின் அவைப் புலவராக இருந்த பாணபட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலானது ‘பூர்வ பாகம்’, ‘உத்தர பாகம்’ என இரு பகுதிகளைக் கொண்டது.

கபந்தன்

ராமனும், லட்சுமணனும் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கால்களும், தலையும் இல்லாத கோர தோற்றம் கொண்ட கபந்தன் என்ற அரக்கன் அவர்களை தடுத்தான். உடனே ராமனும், லட்சுமணனும் அம்பு எய்து, அந்த அரக்கனுக்கு கைகள் இல்லாமல் செய்தனர். பின்னர் அவனது உடலை எரித்தனர். அந்த சாம்பலில் இருந்து சாப விமோசனம் பெற்று ஒரு அழகிய உருவம் கொண்ட கந்தர்வன் வெளிப்பட்டான். தேவலோகத்தில் இசை பாடகனாக இருந்த கந்தர்வன், இந்திரனின் சாபத்தால் இவ்வாறு ஆகியிருந்தான். விமோசனம் பெற்ற அந்த கந்தர்வன் தான், ராவணனிடம் இருந்து சீதையை மீட்க சுக்ரீவனின் உதவியை நாடும்படி ராமனுக்கும் லட்சுமணனுக்கும் ஆலோசனை வழங்கினான்.