எண் 1 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்

எண் 1 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை!

– எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் –
************************************************

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சூரியன் நட்சத்திரம் :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது.நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சிசெய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம்இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலைவாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும்அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும்எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்றுநினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள்இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்குஅமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும்செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமானஅரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள்மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமம், பணவேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம்காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள்.மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பானநடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டுசெல்லும்.

மனிதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள்.தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத்துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள்.புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள்.நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்றஎண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றம்அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்றுஅதற்காகச் செலவு செய்வர்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச்செலவு செய்யத் தயங்காதவர்கள்.

தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம்அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரதுஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றிபெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத்தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களைஎல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான்.

தங்களின் இரக்ககுணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்லபெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன்,இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறிவிடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும்உண்டு.

வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதைநிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும்,பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும்சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே.

படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண்சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலைவாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்.

எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும்கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியைஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன்மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள்அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது.அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள்.ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்குசெய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்துமன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்பு படைத்தவர்கள்.மீண்டம் அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். பொதுவாகத்திருமணம் காலம் கடந்தே நடைபெறும். காதல் விஷயங்களில்ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மனைவிக்கும், நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாகவைத்திருக்க வேண்டும்.

அரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லதுஇயக்கமோ இவர்களுக்குத் தேவை. காரணம் மக்களை ஆசை காட்டிஏமாற்றும் வித்தைகள் இவர்களுக்குத் தெரியாது. பொதுமக்களுக்குஉண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள்.பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச்செய்வார்கள்.

மக்களுக்குப் பிடிக்காத செயல்களையும், மக்களின்பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்து காரியங்களைச்செயல்படுத்துவார்கள். எண்ணின் பலம் குறைந்தால் மேற்சொன்னபலன்கள் மாறுபடும். சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்றகலைகளில் ஈடுபடும் உண்டாகும். தனிமையில் அதிகமாகச்சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.

உடல் அமைப்பு
*****************

நடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றியும்உண்டு. நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவமம் உண்டு.உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு.நடையில் ஒரு கம்பிரம் காணப்படும். பெண்களாக இரந்தால் ஓரளவுஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. கணவனைத்தனது ஆதரவிற்குள் கொண்டு வருவார்கள். அவரை நல்ல வழியில்உயர்த்தி விடுவார்கள். அன்பையும், கடினமாகவே காட்டுவார்கள்.நல்ல தலைமுடியும் உண்டு. கண்களில் கூச்சம், பார்வைக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கதைப்பிடிப்பான தோற்றம்உண்டு. அடிக்கடி தலைவலி ஏற்படும்.

அதிர்ஷ்ட நாட்கள்
********************

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டுகூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ந் தேதி நடுத்தரப்பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள்தானே வரும். ஆனால் நாம் தேடிச் சென்றால் தலைகீழ பலன்களேஏற்படும். 2, 7, 11, 16, 20, 25, 29 தேதிகளில் ஓரளவு நல்ல பலன்கள்ஏற்படும்.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
***********************************

1.தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது நன்மை தரும்.
2. மாணிக்கம் (RUBY), புட்பராகம் (Topaz), மஞ்சள் புஷ்பராகம்அணிவது மிக்க நலம் தரும்.
3. சிவப்பு ரத்தினத் (Red Opal) தில், சூரிய காந்தக்கல் (Sun Stone)ஆகியவையும் மிக்க நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்
*********************

பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகியநிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும்வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.

1-ம் தேதி பிறந்தவர்கள்
**************************

பொதுவாகத் தன் விருப்பபடியே நடப்பவர்கள். இவர்களுக்கு பிறரைஅனுசரித்து போகும் குணம் குறைவு. பொறுமையுடன்,மற்றவர்களையும் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில்பெரும் வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை மிக உண்டு. அரசுமற்றும் அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வார்கள்.

10-ம் தேதி பிறந்தவர்கள்
***************************

சூரிய ஆதிக்கம் ஓரளவு குறைந்துள்ளதால், மற்றவர்களை அனுசரித்துஅன்புடன் நடந்து கொள்வார்கள். எதிலும் ஒரு நிதானம், ஆலோசனைஉண்டு. எப்படியும் புகழ் அடைந்து விடுவார்கள். மனோ சக்தியும்,தன்னம்பிக்கையும் உண்டு. பொருளாதாரத்தில் மட்டும் அடிக்கடிஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பணம் நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

19-ம் தேதி பிறந்தவர்கள்
***************************

மிக்க அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்படும். தனது கொள்கையில்ஈடுபாடும், பிடிவாதமும் கொண்டவர்கள். தங்களது நடை உடைபாவனைகளில் கெடுபிடிகள் காட்டுவார்கள். பல செய்திகளையும்அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு. அன்பால் மற்றவர்களைவெற்றி கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.படிப்படியான முன்னேற்றம் உண்டு.

28-ம் தேதி பிறந்தவர்கள்
***************************

சூரிய ஆதிக்கம் மிகவும் குறைவு. பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள்அடிக்கடி ஏற்படும். மென்மை உணர்வுகள் இருக்கும். மற்றவர்களைஅனுசரித்துச் செல்வதாலும், பாசமுடன் பழகுவதாலும், நண்பர்கள்,உறவினர்கள் ஆகியோரின் அதரவு உண்டு. அதனால் ஜாமீன்,கைமாற்றுக் கொடுத்துவிட்டு பின்பு பாதிப்பிற்கு உள்ளாவதும்உண்டு. 2, 8 இணைந்து வருவதால் வீண் கர்வம், டம்பப் பேச்சுஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும்,விரயங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும்உறவினர்களால் பண விஷயங்களில் ஏமாறாமல் பார்த்துக்கொண்டால், பல நன்மைகளை அடையலாம்.

சூரியனின் சக்கரம்யந்திரம் & சூரியன் & 15

6 1 8
7 5 3
2 9 4

எண் 1 சிறப்புப் பலன்கள்
****************************

எண்1 ல் பிறந்தவர்கள் (விதி எண் 1 எண்காரர்கள் கூட) இந்தஎண்களின் சக்தியானது தொழில் வகையிலும், அரசியல் வகையிலும்,சமூக வகையிலும் நல்ல பலன்களைக் கொடுத்தாலும், இவர்களதுகுடும்பத்தில், மனைவி அமைவதில் மட்டும் சில குறைபாடுகளைக்கொடுத்து விடுகிறது. இநத் எண்ணில் பிறந்த (அல்லது) பெயர்அமைந்த சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைகிடைக்கிறது.

ஆனால் பெரும்பாலோருக்கு இல்வாழ்க்கை என்பதுதாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமைகின்றது.அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள்அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது.

இது தொழில் சம்பந்தமானபிரிவுகள் போன்ற தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும்.காதல் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவேஇந்த அன்பர்கள் திருமணத்தை மட்டும் தங்களுக்கு அனுகூலமானதேதிகளில் பிறந்தவர்களுடன் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் இவர்களுக்கு நிச்சயம் இல்லற இன்பம் அனுபவிக்கலாம்.

இந்தஎண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண்) எந்த ஒருசெயலையும் 4, 8 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்)செய்யக்கூடாது. திருமணம், சடங்ககுள், புதுமனை புகுதல்,புதுக்கணக்கு, இடம் மாறுதல், புதிய உத்தியோகம், அல்லது உயர்பதவி ஏற்றல் கூடாது. மேலும் புதியதாகக் கடை ஆரம்பித்தல், கடன்கேட்கச் செல்லுதல்(?) பெரிய மனிதர்களை பார்க்க செல்லுதல்,புதுப்பயிர் செய்தல், புதுக்கிணறு தோண்டுதல் ஆகியவைசெய்யக்கூடாது.

நண்பர்கள்
************

இவர்களுக்கு 1, 2, 3, 4, 5, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்தான்நல்ல கூட்டாளிகளும், நண்பர்களாகவும் இருப்பார்கள்.

திருமணம்
************

இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்துகொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்துகொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும்.காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதேசூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப்பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.

திருமண தேதி
*****************

1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும். (இவர்களுக்குத்தேன் மிகவும் சிறந்தது. அடிக்கடி உணவில் தேனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொன்னாங்ககண்ணிக் கீரையும் மிகவும் ஏற்றது.கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் வித்த நீர் ஓட்டம்சமப்படும். நோய்களின் கடுமை குறைந்து வரும். இயற்கைவைத்தியத்தில்தான் இவர்களது நாட்டம் செல்லும்.)

நோய்களின் விபரங்கள்
***************************

சூரியன் ஒரு நெருப்புக் கோளம். இதனால் இந்த எண்காரர்கள்பெரும்பாலும் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். மலச்சிக்கல்அடிக்கடி உண்டாகும். பித்த நீர் ஓட்டம் மிகுந்துவிடும். எனவே, இரத்தஓட்டம் சம்பந்தமான பலவித நோய்களும் குறைபாடும் உண்டாகும்.கண் பார்வை குறைபாடுகளே பெரும்பாலும் இவர்களுக்கு ஏற்பம். பலஅன்பர்களுக்கு அடிக்கடி தலைவலியும் ஏற்படும். அடிக்கடிகண்ணாடிகளை மாற்றிக் கொள்வார்கள். இரத்தக் கொதிப்புப, சீரணக்கோளாறுகள், படபடப்பு ஆகியவையும் ஏற்படும். பித்த சம்பந்தமானநோய்களும் ஏற்படலாம்.

எனவே இவர்கள் பழவகைகளை அதிகம்சேர்த்துக் கொள்ள வேண்டும். காரம், புளிச்சுவையையும், சீரணத்தைமந்தப்படுத்தும் உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, ஆரஞ்சுப்பழம், சாதிக்காய், இஞ்சி,பார்லி ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். முன்பே சொன்னபடி தேனைத் தினந்தோறும் உண்டுவந்தால் மிக்க நலம்பெற்று வாழ முடியும்.

நண்பர்கள்
************

4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாகஇருப்பார்கள். 2, 7 தேதிகளில் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

வேண்டாத நாட்கள்
*********************

8, 17, 26 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 8 வரும் எண்கள் நாட்களும்புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தோல்வியே ஏற்படும்.இவர்களுக்கு மக்கட்பேறு உண்டு.

எண் 1 க்கான தொழில்கள்
*****************************

இவர்கள் பொதுவாக நிர்வாக சக்தி நிரம்பியவர்கள். எப்போதும்அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழேஉள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்தி நிறைந்தவர்கள்.உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படிசெயல்படவே விரும்புவார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்மஸ்தாபனங்கள், கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள்,தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நிர்வாகியாக அமைவார்கள்.எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கையான குமாஸ்தாவாகஇருப்பார்கள்.

தனியாக நிறுவனங்களை நடத்தும் திறமை மிக்கவர்கள். ஆனால்,வளைந்து கொடுக்கவோ, அனுசரித்துப் போகவோ தெரியாதவர்கள்.இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும்இவர்களது நோக்கமாக இருக்கும். போட்களில் விட்டுக் கொடுக்கத்தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்தி உண்டு.இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும்காட்டிவிடும். தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால்அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், உடனே சமாளித்துவிடுவார்கள். அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், GEMS வியாபாரிகள் போன்ற தொழில்களும் ஒத்து வரும்.விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித்துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும்.

வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை,பழவகைகள், காய்கறி வகைகள், ஆபரணங்கள், செயற்கைநூலிழைகள் (Fibress) மூலிகைகள் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள்,பிராணிகள் பராமரிப்பு, தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்க-ளுக்கு ஏற்ற தொழில்கள். இவர்கள் தங்களது வியாபாரயுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் காலத்திற்கேற்றபடிமாற்றிக்கொண்டு செயல்பட்டால், தங்களது தொழிலில் பெரும்வெற்றிகளைக் குவிக்கலாம்.

நவக்கிரக மந்திரங்கள் – சூரியன்
*************************************

சூரியன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சூரிய தசை அல்லதுசூரிய அந்தர் தசையின் போது:

சூரியனின் கடவுளான சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.

தினசரி ஆதித்ய ஹிருதய ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.

தினசரி காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

சூரிய மூல மந்திர ஜபம்:
“ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”,
48 நாட்களில் 6000 முறை சொல்ல வேண்டும்.

சூரிய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!

தமிழில்,
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!
48 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.

தொண்டு: ஞாயிறன்று நன்கொடையாக கோதுமை, அல்லது சர்க்கரைமிட்டாய் கொடுக்க வேண்டும்.

நோன்பு நாள்: ஞாயிறு.

பூஜை: ருத்ர அபிஷேக பூஜை.

ருத்ராட்சம்: ஏகமுகி (ஒரு முகம்) அல்லது 12 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

சூர்ய காயத்ரி மந்திரம்
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||

சூரிய தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 73வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

சூரிய பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி சிம்ம ராசி திக்கு நவக்கிரகங்களுக்கு நடுவில்
அதி தேவதை அக்கினி ப்ரத்யதி தேவதை உருத்திரன்
தலம் சூரியனார் கோயில் வாகனம் ஏழு குதிரை பூட்டிய தேர்
நிறம் சிவப்பு உலோகம் தம்பாக்கு
தானியம் கோதுமை மலர் செந்தாமரை
வஸ்திரம் சிவப்பு ஆடை ரத்தினம் மாணிக்கம்
நைவேத்யம் கோதுமைசக்ரான்னம் சமித்து வெள்ளெருக்கு
சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
சூரிய பகவான் கீர்தனைகளை ஸௌராஷ்ட்ர ராகத்திலும்,

சூர்ய பகவான் கீர்த்தனம் – பல்லவி
ஸூர்ய மூர்த்தே நமோஸ்துதே ஸூந்தரச்சாயாதிபதே
அனு பல்லவி
கார்ய காரணாத்மக ஜகத் ப்ரகாஸக ஸிம்மராஸ்யாதிபதே
ஆர்ய வினுத தேஜஸ் பூர்த்தே ஆரோக்யாதி பலத கீர்த்தே
சரணம்
ஸாரஸ சித்ர மித்ரபானோ ஸஹஸ்ரகிரண கர்ண ஸூனோ
க்ரூர பாபஹர க்ருஸானோ குருகுஹ மோதித ஸ்வபானோ
ஸூரிஜனேடிதஸூதினமனே ஸோமாதி க்ரஹ ஸிகாமனே
தீரார்ச்சித கர்ம ஸாக்ஷிணே திவ்யதர ஸப்தாஸ்வரதிநே
ஸௌராஷ்ட்ரார்ண மந்த்ராத்மனே ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே
பாரதீஸ ஹரிஹராத்மனே பக்தி முக்தி விதரணாத்மனே ( ஸூர்ய )

சூர்ய மூர்த்திக்கு நமஸ்காரம். கிரகங்கள் அனித்திற்கும் முதல்வராய்விளங்குபவரே, அழகிய சாயாதேவியின் கணவரே, அனைத்திற்கும்காரணமானவரே, மிகுந்த தேஜஸ் கொண்டவரே, தாமரைக்கும்,உலகிற்கும் நண்பரே, ஞானிகளால் துதிக்கப்படுபவரே, ஒளிதருபவரே, சிம்ம ராசியின் தலைவரே, ஆர்யரால் வணங்கப்படுபவரே, ஆரோக்யம் தருபவரே, கீர்த்தி மிக்கவரே, ஆயிரம் கிரணங்கள்கொண்டவரே, பாவம் போக்குபவரே, அக்னி மயமானவரே, ஏழுகுதிரைகள் பூட்டிய தேரினில் பவனி வருபவரே, மந்த்ர வடிவானவரே,தங்க நிறம் கொண்டவரே, பக்தியையும், முக்தியையும் அளிப்பவரேஉம்மை வணங்குகின்றேன்.

சூர்ய பகவான் முமூர்த்திகளிம் அம்சமாய் விளங்குபவர். சர்வ மங்களம்வழங்குபவர். தன்னை வழிபடுபவரது மனக் கவலைகள், பகைமை,சங்கடங்களை போக்குபவர். நினைத்த கரியங்களை நிறைவேற்றஅருள்பவர். கண் நோய்கள், இருதய நோய்கள் மற்றும் கமாலைநோய்களை போக்குபவர். சிவந்த நிறமும், செவ்வாடையும்அணிந்தவர். செம்மலர் சூடியவர். பத்மாசனத்தில் கிழக்கு முகம் நோக்கி தன் இரு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தியுள்ளவர்.சிவாலயங்களில் பரிவார தேவததையாக விளங்குபவர். தினந்தோறும்சூரிய நமஸ்காரம் செய்திட கண்கள் ஒளி பெருகும். சூரிய பகவான் சாத்வீக குணம் கொண்டவர். இவர் ஒரு சுப கிரகம். மாதம் ஒரு ராசிஎன 12 மதங்களும் 12 ராசிகளில் சஞ்சரிக்கின்றார். ஜதகத்தில் ஆத்மா,தந்தை, தலை, சரீரம், உத்யோகம், வலது கண், பித்தம், மனச் சிலேகம்,ஜுரம், யாத்திரை, தைரியம், புகழ், உடல் நலம். ஆட்சித் திறன்போன்றவைக்கு காரணமானவர்.

சிறப்பான சில குறிப்புகள்
****************************

எண் : – 1

எண்ணுக்குறிய : கிரஹம் : சூரியன்

அதிர்ஷ்ட : தேதிகள் : 1, 10, 19, 28, 2, 11, 29

அதிர்ஷ்டகிழமை : ஞாயிறு, புதன், திங்கள்

அதிர்ஷ்ட : மாதங்கள் – ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜுலை,நவம்பர், அக்டோபர்

அதிர்ஷ்ட ரத்தினங்கள் : மாணிக்கம், மஞ்சள் புஷ்பராகம்

அதிஷ்ட : திசை – கிழக்கு

அதிர்ஷ்ட நிறங்கள் : சிகப்பு, மஞ்சள் சிகப்பு கலந்த நிறம்

அதிர்ஷ்ட : தெய்வங்கள் – மஹாவிஷ்ணு, சிவன்

அதிர்ஷ்ட : மலர்கள் – செந்தாமரை, ரோஜா

அதிர்ஷ்ட தூப, தீபம் : சந்தனம் கலந்த தூபம் அல்லது தீபம்அதிர்ஷ்டம் அளிக்கும்

அதிர்ஷ்ட சின்னங்கள் : உதய சூரியன், மயில், தேர், ராஜா,ஒளிரும்தீபம்

அதிர்ஷ்ட : மூலிகைகள் : விஷ்ணமூலிகை, வில்வம்

அதிர்ஷ்ட யந்திரங்கள் : சிதம்பர சக்கரம், ஏர்ஒளிவசிய சக்கரம்

அதிர்ஷ்ட எண்கள் : 1,10,19,28,37,46,55,64,82,91,100.

அதிர்ஷ்ட : உலோகம் – தங்கம்

ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை : 8, 17, 26

ஆகாத : தேதிகள் – 8, 17, 26

ஆகாத : நிறம் – கருப்பு, காப்பிகலர்