எண் 6 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்

எண் 6 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்

! பிறப்பு முதல் இறப்பு வரை!

 எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்
************************************************

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சுக்கிரன் நட்சத்திரம் பரணி, பூரம், பூராடம்
ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6-ம்எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றிமட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்தஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அதுமட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும்,குதர்க்கமும் செய்வார்கள்.

இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள்ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை,நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்தஇளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள்இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும்பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில்இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள்.

இவர்களே குபேரனின்மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச்சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும்.சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவுசெய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும்,அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்தகஞ்சத்தனம் பார்ப்பார்கள்.

இந்த 6-ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள்மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகிவிடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள்.ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான்கொடுப்பார்கள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை,வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள்.

தங்களது சபலபுத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம்எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களைஅடைகின்றனர்.
மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களைபுண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால்எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப்பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது!இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போதுமுரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
இவர்களுக்க 5-ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம்உண்டு.

இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே!

எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமைபோன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ளவேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள்பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின்வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவேவிளங்குவார்கள்.

இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை!ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை!பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்குஇயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள்தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டுஉழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள்மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும் இவர்களுடன்இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசியஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான்,பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும்.இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன்வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.

இவர்களது தொழில்கள்
**************************

இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவேசினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில்,எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம்!மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம்போன்றவையும் வெற்றி தரும்.

மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசுஅதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்றநுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகைவிற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம்.அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள்,நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால்பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்குஉண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப்பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும்நன்மை தரும்.
முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம்.எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவேஇவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும்தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப்பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம்,வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள்ஈட்டலாம்.

திருமண வாழ்க்கை
*********************

திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவாஎன்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும்திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள்!மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத்தயங்க மாட்டார்கள். எனவே 6-ம் எண்காரர்களை மணக்கும்பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு,கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்புமூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப்போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள்உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால்நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத்தவிர்த்துவிட வேண்டும். 3-ம் எண்காரர்களை மட்டும்மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும்,கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்கநன்மை தரும்.

இவர்களது நண்பர்கள்
*************************

6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும்,கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில்பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின்தொடர்பும் கூட்டும் கூடாது! ஆனால், 3 எண்காரர்களால்தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும்.ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத்தேடிச் செல்லக்கூடாத. (3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.

இவர்களது நோய்கள்
************************

பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன்பிரச்சினைகள் உண்டு. இதய பலவீனம் இரத்த ஓட்டக்கோளாறுகள்ஏற்படும். இந்திரியம் அதிகம் செலவு செய்பவர்களாதலால்பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும்அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள்போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும். அடிக்கடி மூச்சுத்தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும்.மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவிவரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம்.இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்றகுணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும்,அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.

சுக்கிரன் யந்திரம் & சுக்கிரன் & 30
*************************************
11 6 13
12 10 3
7 14 9

சுக்கிரன் மந்திரம்
********************

ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

எண் 6. சிறப்புப் பலன்கள்
****************************

உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6-ஆம் எண்ணைப்பற்றி விரிவாகப் பார்ப்போம். இவர்களுக்கு இந்த பூ உலகம்சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்பஉணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே! அசுர குருவான சுக்கிரனின்ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல்சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள்(ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும்உண்டு!

இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும்போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகியபொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு,பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்தவிரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம்போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும்,கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடிவிருந்து கொடுத்து மகிழ்வார்கள்.

இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களைமுடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதேகருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படிபணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களைநகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றிஅடைவார்கள்.
லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில்அதிர்ஷ்டமும் உண்டு.

தங்களது சுயலாபத்திற்காகவே,அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச்சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளைஎடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றைஅறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள்.

இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள்ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள்துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும்மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களைஎளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடுஉண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும்இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள்மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள்வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.

காதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம்இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம்கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால்ஸ்திரீலோலர்கள் ஆகிவிடுவர்)
இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்/ மனைவிஅமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில்சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே,திருமணமாகாதர்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால்இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம்.

பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடுஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும்உருவாக்கிக் கொள்வார்கள்! பலருக்குப் பிறவியிலேயேஅமைந்திருக்கும்.
சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்றகலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே! இவர்கள் மற்றவர்களின்கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும்உண்டு.
கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரைஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்துசெல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள்.இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.

இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு! பெண்குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளைஅனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே! இவர்களால் தான் உலகில்பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்றுஉள்ளன.

அதிர்ஷ்ட தினங்கள்
**********************

ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகியதேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே! கூட்டு எண் 6 மற்றும் 9எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில்முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது! நடுத்தரமான பலன்களேகிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் Colours
******************************

இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்தவண்ணங்கள்! இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும்.வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.
அதிர்ஷ்ட இரத்தினங்கள்
இவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில்என்பார்கள். மேலும் (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும்அணிந்துவர, யோகங்கள் பெருகும். (செவ்வந்திக்கல்) அணியவேகூடாது!

6 ஆம் தேதி பிறந்தவர்கள்
****************************

எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி,தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும்காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்கசுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடுகொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம்வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள்.சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.

15 ஆம் தேதி பிறந்தவர்கள்
******************************

மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு.பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும்,நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும்திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்கமாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக்கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றைவெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா,டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும்தேடி வரும்.

24 ஆம் தேதி பிறந்தவர்கள்
******************************

அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும்ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும்,பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள்.மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு,திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயேகிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்துவிளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டுஅதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு.சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீதுதிணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றேகூற வேண்டும்.

எண் 6க்கான (சுக்கிரன்) தொழில்கள்
*****************************************

இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பலதுறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்றகவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்டநுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும்,மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள்உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும். பட்டு மற்றும்ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை!இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்! நளினமாகநடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.

திரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார்செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள்,நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப்பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge)நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகுதையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும்இவர்களுக்கு ஏற்றவை! Fashion Designing, Garment தொழில்களும்உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத்துறையிலும் பிரகாசிப்பார்கள்.

நவக்கிரக மந்திரங்கள் – சுக்கிரன்
**************************************

சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சுக்கிர தசை அல்லது சுக்கிர அந்தர்தசையின் போது: சுக்கிரனின் கடவுளான மஹாலட்சுமி தேவியைத் தினமும்வழிபடவேண்டும்.

தினசரி ஸ்ரீ ஸூக்தம் அல்லது தேவி துதி அல்லது துர்கா சாலிசா படிக்கவேண்டும்.

சுக்கிர மூல மந்திர ஜபம்:
“ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ”,

40 நாட்களில் 20000 முறை சொல்ல வேண்டும்.

சுக்கிர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

தமிழில்,

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம்

வெண்ணை அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.

பூஜை: தேவி பூஜை. மஹாலட்சுமிக்கு வெண்தாமரை

சாத்தி வழிபடா வேண்டும்.

ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

சுக்கிர காயத்ரி மந்திரம்
அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||

சுக்கிர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 36 வதுஅத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான

ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.

சுக்கிர பகவான் கீர்தனைகளை பரசு ராகத்திலும்

சுக்கிர பகவான் கீர்த்தனம் – பல்லவி
ஸ்ரீசுக்ரம் பகவந்தம் சிந்தயாமி ஸந்தகம்
ஸகல தத்வக் ஞம் (ஸ்ரீ)

அனு பல்லவி
ஹே சுக்ர பகவன்மாம் ஆசுபாலய
வ்ருஷ துலாதீச தைத்ய ஹ்ரிதோபதேச
கேசவ கடாக்ஷைக நேத்ரம் கிரீடதரம் தவளகாத்ரம்

சரணம்
விம்ஸதி வத்ஸரோடு தஸா விபாகம் அஷ்டவர்க்கம்
கவிம் களத்ர காரகம் ரவி நிர்ஜர குருவைரிணம்
நவாம்ஸஹோராத்ரேக்காணாதி வர்க்கோத்தமாவஸரஸம்யே
வக்ரோச்ச நீச ஸ்வக்ஷேத்ர வரகேந்த்ர மூல த்ரிகோணே
த்ரிஸாம்ச ஷஷ்ட யாம்ஸைராவதாம்ஸ பாரிஜாதாம்ஸ கோபுரம்ஸ
ராஜயோக காரகம் ராஜ்யப்ரதம் குரு குஹமுதம் (ஸ்ரீ)

சகல விதமான தத்துவங்களை உணர்ந்தவரே, மஹா விஷ்ணுவின்கடாக்ஷத்தால் ஒரு கண்னை திரும்ப பெற்றவரே, வெளுத்த சரீரம்கொண்டவரே, ரிஷப, துலா ராசிகளின் அதிபதியே, அசுரர்க்குதலைவனே, சுக்கிர திசையில் 20 ஆண்டுகள் உள்ளவரே, மற்றகிரகங்களை விட விசாலமானவரே, சூர்ய, குரு கிரகங்களுக்குபகைவனே, பண்டிதர்,

களத்திர வியஷயங்களுக்கு காரண கர்த்தாவே, ராசியின் 9 பாகமானநவாம்சம், ராசியின் ஹோரை, ராசியின் மூன்று பங்குகளானத்ரேக்கோணம் இவைகளில் வர்கோத்ரமானவரே, த்ரிகோணம், மூலத்ரிகோணம் அல்லது விருச்சிக ராசி இவற்றில் ராசியின் 30பங்குகளான த்ரிம்சாம்சம், ஜநந லக்னத்தை 60 பிரித்து வரும்ஐராவதாம்சம், பாரிஜாதாம்சம், கோராம்சம் என்ற வர்க்கத்தைஅடைந்த காலங்களில் ராஜ யோகத்தை அளிப்பவரே, குரு குஹனுக்குசந்தோஷம் அளிப்பவரே சுக்கிர பகவானே உம்மை துத்திக்கின்றேன்.

சுக்கிர பகவானான சுக்கிராச்சாரியார்
அசுரர்களின் குருவாக விளங்கியவர் இந்த சுக்கிராச்சாரியார்.இறந்தவரை உயிர்ப்பிக்கும் ” அமிர்த சஞ்சீவினி ” மந்திரத்தைஈசனிடம் இருந்து பெற்றவர். ஒரு சமயம் தேவர்களுக்கும் ,அசுரர்களுக்கும் நடந்த போரில் , இறந்த அசுரர்களைசுக்கிராச்சாரியார் உயிர்ப்பிக்க, சிவ பெருமான் பார்க்கவரைவிழுங்கினார். பல காலம் கழித்து தவப் பயனால் வெளிவந்தார்பார்க்கவர்.

இதனால் சிவ புத்திரர் ஆனார். வெண்ணிறம் கொண்டதால் சுக்கிரன்என்ப் பெயர் பெற்றார் பார்க்கவர். வாமன அவதாரத்தில், மகாபலிமகா விஷ்ணுவிற்கு தானம் தருகையில், தானத்தை தடுக்கும்பொருட்டு வண்டாக மாறி, தர்ப்பை புல்லால் தன் ஒரு கண்ணைஇழந்தவர். பின்னர் பல காலம் தவம் இருந்து தன் கண்ணை திரும்பபெற்று, நவகிரகங்களில் ஒருவராக பெரும் பேறு அடைந்தவர்..சுக்கிரன் அசுர குருவாயினும் அசுரத் தன்மையற்ற சுப கிரகர். ஒருவரதுவாழ்வில் சுக்கிர திசை ஒரு முறைதான் வரும். சுக்கிர திசை 30வருடங்கள் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் அருள்கிடைத்தால் நல்ல பல மேன்மைகள் அடைவர். சுக்கிர தோஷத்திற்குகஜ லட்சுமி, ராஜ ராஜேஸ்வரி வழிபாடும், ” தேவி மகாத்மிய “பாராயணமும் செய்ய வேண்டும். சுக்கிரனின் ஆசி கிடைக்க அவரைவெள்ளை தாமரை மலர்களால் அர்ச்சித்து, அரசு சமித்து தூபம் காட்டி,தயிரன்னம், மொச்சை பொடி அன்னம் கொண்டு நைவேத்யம்செய்ய்து, சுக்கிர பகவானை 9 முறை வலம் வர வேண்டும்.

சுக்கிர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி ரிஷபம், துலாம் திக்கு கிழக்கு
அதி தேவதை இந்திராணி ப்ரத்யதிதேவதை இந்திரமருத்துவன்
தலம் ஸ்ரீரங்கம், கஞ்சனூர்,திருநாவலூர் வாகனம் தலை
நிறம் வெள்ளை உலோகம் வெள்ளி
தானியம் மொச்சை பயிறு மலர் வெண் தாமரை
வஸ்திரம் வெள்ளை நிறஆடைகள் ரத்தினம் வைரம்
நைவேத்யம் மொச்சைப் பொடிஅன்னம் சமித்து அத்தி
ஸ்லோகம்

” திரவிய லாபம் சேர்ப்பான் தேர்ந்து ஆரோக்கியம் ஈவான்
சயனத்தை சுகமாக செய்வான் நினைவுறு நண்பர் கூட்டம்
நிறைந்திடச் செய்வான் வேனன் மறை புகழ் கொண்ட
சுக்கிரன் மகிமையை யார் சொல்வாரே !!!

ஒருவருக்கு விவாக பிராப்தி வேண்டும் என்றாலும், மலட்டு தன்மைநீங்கி புத்திரப் பேறு கிடைக்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின்அனுக்கிரகம் மிக அவசியம். இவர் தனது நான்கு கைகளில் தண்டம்,வரகஸ்தம், கமண்டலம், அஷமாலை கொண்டு விளங்குபவர்.வெண்ணிற ஆடையுடனும் , வெள்ளை பூவுடன் காட்சி தருபவர்.தனது அதி தேவதையான தேவேந்திரனின் மனைவி இந்திராணியைவழிபட்டால் மிகுந்த மன மகிழ்வு அடைபவர்.
வெள்ளிக் கிழமைகள் விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்றுவழிபடுவதாலும், ராஜ ராஜேஸ்வரியை வணங்குவதாலும், வெள்ளி,வைர நகைகள் அணிவதாலும், வெண்ணிற ஆடைகள் உடுத்திக்கொள்வதாலும், மொச்சை தானியத்தை தானமாக தருவதாலும் சுக்கிரதோஷங்கள் நீங்கும். சுக்கிர பகவானின் அருளாசி கிடைக்கும்.

சிறப்பான சில குறிப்புகள்
*****************************

எண் :- 6

எண்ணுக்குறிய கிரஹம் :- சுக்கிரன்

அதிர்ஷ்ட தேதிகள் :- 6,15, 24, 9, 18, 27

அதிர்ஷ்ட கிழமை :- வெள்ளி, செவ்வாய்

அதிர்ஷ்ட மாதம் :- ஜுன்

அதிர்ஷ்ட ரத்தினங்கள் :- வைரம், மரகதம்

அதிஷ்ட திசை :- மேற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறம் :- வெள்ளை, நீலம், பச்சை

அதிர்ஷ்ட தெய்வங்கள் :- மஹாலட்சுமி, துர்கை, கருடாழ்வார்

அதிர்ஷ்ட மலர்கள் :- மல்லிகை, வெண்தாமரை

அதிர்ஷ்ட தூப, தீபம் :- லவங்க தூபம், குங்குலியம்

அதிர்ஷ்ட சின்னங்கள் :- கருடன், பசு, தாமரை, புஷ்பம், நீர்

அதிர்ஷ்ட மூலிகைகள் :- செந்நாயுருவி, அம்மான்பச்சை

அதிர்ஷ்ட யந்திரங்கள் :- குபேர யந்திரம், அஷ்டலட்சுமி யந்திரம் ஸ்ரீசக்ரம்

அதிர்ஷ்ட எண் :- 6, 9

ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை :- 3, 5

ஆகாத தேதிகள் :- 3,12, 2