சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை
How saturday becomes perumal-worship- history


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீட்சி பெற ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான். சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.  நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே  சனிக்கு அதிபதியாக இருப்பவர்.

ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார்.அப்போது எதிர்பட்ட நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா...


நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில்      தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.

பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்தி தான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும்  சங்கடத்திலிருந்து காக்கும் வேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் வேங்கடவன் இருக்கிறாரே...