சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்
bitter-gourd-Controlling-diabetes.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய். இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என நிறைய மருத்துவ சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். அதில் உள்ள சரண்டின், மொமார்டின் போன்ற தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவ செயல்பாட்டுக்கு காரணம் என்று சான்றளித்துள்ளனர்.

அதே நேரத்தில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் என்பது வெறும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மட்டும் என்று புரிந்துகொள்ளக்கூடாது. உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் ஒரு பொருள், நீரிழிவு நோய்க்கான முழுமையான மருந்தல்ல. பாகற்காய் ரத்த கொழுப்பு வகையை குறைப்பதிலும், செல் அழிவை கட்டுப்படுத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடண்டையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.


பாகற்காய் சாப்பிடுவதால் நீங்கள் சாப்பிடும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரம் பல சித்த மருந்துகளுக்கு பத்தியமாக பாகற்காய் அறிவுறுத்தப்படுகிறது. சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின், பாகற்காய் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

அதிக சர்க்கரையை சாப்பிடுவது, உடலுழைப்பு குறைவு, அதிக உடல் எடை அல்லது அதிக மனஉளைச்சல் ஆகியவை மட்டுமே நீரிழிவு நோய்க்கான முழுமையான காரணம் இல்லை. ஆனால் 1960-க்கு பின்பு பல மில்லியன் டன் உரங்களை பூமியில் கொட்டியதுடன், பூச்சிக்கொல்லிகள் மூலம் உணவுப் பயிர் விளைவித்ததால் இந்த நோய் பெருகியதா, பாஸ்சுரைஸ்டு என்ற பாலில் உள்ள ஒரு புரதம் கணையத்தைத் துன்புறுத்தியதால் பிறக்கிறதா, இல்லை நம் சுற்றுச்சூழலில் கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள் நமது கணையத்து ஐலட் செல்களை சிதைத்ததால் தாக்கம் பெருவாரியாகப் பெருகுகிறதா? எனப் பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

எனவே, நீங்கள் எந்தத் துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டுவந்தாலும், உணவில் கவனம், சரியான உடற்பயிற்சி, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே சீரமைக்கும் யோகாசன பயிற்சி ஆகிய அனைத்தும் சேர்ந்திருந்தால் மட்டுமே படிப்படியாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது.