தூங்கி எழும்போது முதுகு வலியா? இதுதான் காரணம்

தூங்கி எழும்போது முதுகு வலியா? இதுதான் காரணம்
sleeping-position-for-lower-back-pain.

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு. முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நன்றாக தூங்கி எழுந்தபிறகு, முதுகு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு, நாம் சரியான நிலையில் தூங்காமல் இருப்பதும், சரியான இடத்தில் தலையணை வைத்துத் தூங்காமல் இருப்பதுமே காரணம். தூங்கும் முறையும், தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் ரொம்பவே முக்கியம்.


கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால்..?

தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புற முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு பக்கமாக (side lying) அல்லது நேராக(மல்லாந்து) படுத்தால் (Supine lying) வலி குறையும். இப்படிப் படுக்கும்போது, முதுகுத் தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் சென்று, கழுத்துப் பகுதி தளர்வடையும். அதனால் வலி குறையும். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்கும் தலைக்கும் இடையில் வைத்துத் தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும் .

முதுகின் கீழ்ப்பகுதியில் வலி இருந்தால்?

ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தால், முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலி குறையும். ‘நேராகப் படுத்தே பழகிவிட்டேன், ஒரு பக்கமாக படுத்தால் தூக்கம் வராது’ என்பவர்கள் தலையணையை முழங்காலுக்குக் கீழ் வைத்துத் தூங்கலாம். இது ஓரளவுக்குத்தான் பயனளிக்கும். ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கப் பழகிக் கொள்வது நல்லது.

முதுகின் கீழ்ப்பகுதியில் வலி உள்ளவர்கள் குப்புறப்படுத்துத் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். அப்படித் தூங்கினால் வலி அதிகமாகும். தவிர, கழுத்தில் உள்ள தசைகள், நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கும்.

முதுகின் நடுவில் ஏற்படும் வலியைக் குறைக்க!

சேரில் உட்காரும்போது, முன்புறமாக குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ, இடதுபுறமாகவோ சாய்ந்தபடி உட்காருவது, நடக்கும்போது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தவாறோ தூங்கினால் இந்தப் பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

உட்காரும் நிலையை மாற்றினால் மட்டுமே இந்த வலியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து, பின்புறமாக லேசாக சாய்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். மேலும், மசாஜ், ஃபோர்ம் ரோலிங், நெஞ்சுப் பகுதிக்கான ஸ்ட்ரெட்ச்சிங், முதுகுப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் போன்றவை வலியைக் கட்டுப்படுத்தி நன்றாக தூங்க உதவிபுரியும்.