இரத்தம் கொடுப்பதும் - எடுப்பதும் எளிதல்ல

இரத்தம் கொடுப்பதும் - எடுப்பதும் எளிதல்ல
Blood-donation-is-not-easy.

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. இதில் சிறு கவனக்குறைவு ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. சிறு கவனகுறைவு ஏற்பட்டால் கூட அந்த இரத்தம் உயிரையும் எடுக்கும் என்பதற்கு எச்.ஐ.வி. தொற்று இரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்திய விவகாரம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது வயற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க மருத்துவ உலகம் போராடுகிறது. இரத்ததானம் செய்த வாலிபரோ ஏற்கனவே 2016-லும் இரத்ததானம் செய்து இருக்கிறார். அப்போதே அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்கி இருப்பதை கண்டறிந்து இருக்கிறார்கள். இதுபற்றி அவருக்கு ஆலோசனைகள் வழங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.


நோய் தொற்று இருப்பது தெரியாமல் தற்போது அவரது அண்ணிக்கு இரத்தம் கொடுக்க வந்த போதும் அவரது இரத்தத்தை எடுத்து இருக்கிறார்கள். எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரியாமலே அந்த இரத்தத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இரத்தத்தை ஆய்வு செய்வதில் கவனக்குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், எச்.ஐ.வி. தாக்கியவர் என்று ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவரிடம் இரத்தம் எடுத்தது எப்படி?

சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கு எச்.ஐ.வி. இருப்பதை அறிந்து நேரடியாக வந்து விபரத்தை சொல்லி தனது இரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாதீர்கள் என்று சொல்லி இருக்காவிட்டால்...? இரத்தம் கொடுப்பதும், ஏற்றுவதும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதுபோல் ஒருவரது உடலில் இருந்து அப்படியே மற்றொருவர் உடலுக்கு செலுத்திவிட முடியாது.

உயிர்காக்கும் இரத்தம் எடுப்பது, சேமிப்பது, பகுப்பாய்வு செய்வது எல்லாம் அவ்வளவு சுலபமானதா என்று கேட்டால் இல்லவே இல்லை என்று அடித்து சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர். அரசோ, தனியாரோ இரத்த பரிசோதனை நிலையம், இரத்த வங்கி தொடங்க அனுமதி பெறுவது கூட சாதாரண விஷயமல்ல. அதற்கு பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

தகுதி பெற்ற மருத்துவர், செவிலியர், லேப் டெக்னிஷியன், நவீன ஆய்வு கருவிகள், பரிசோதனை கூடம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே முடியும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் நேரடியாக ஆய்வு செய்து திருப்தி ஏற்பட்டால் மருந்து கட்டுப்பாட்டு கழகத்துக்கு பரிந்துரைப்பார்கள்.

இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு கழகம் சோதனையை தொடங்கும். அவர்களும் முழு திருப்தி அடைந்தால் மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். இதையடுத்து மத்திய அரசு துறையும் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகே லைசென்சு வழங்கப்படும். அறையின் அளவு குறைந்தாலோ அல்லது ஏ.சி.யின் அளவு குறைந்தால்கூட அனுமதி கொடுக்க மாட்டார்கள். அந்த அளவு நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

சரி, ஆய்வகம், இரத்த வங்கி தொடங்கியாச்சு. இஷ்டம் போல் இரத்தம் எடுத்துவிட முடியுமா? அதற்கும் கட்டுப்பாடுகள் அதிகம்! இரத்தம் கொடுப்பதால் எந்த ஆபத்தும் வராது. அப்படியிருந்தும் இரத்தம் கொடுக்க பலர் முன்வருவதில்லை. எனவே இரத்த தானம் செய்ய வருபவர்களை வரவேற்று எல்லோரிடமும் 350 மி.லி. இரத்தம் எடுத்து விடுவார்கள். இரத்தம் எடுக்கும் போது இரத்தத்தின் எச்.பி. அளவு மற்றும் இரத்ததானம் செய்பவரின் உடல் எடையை மட்டும் பார்த்து எடுப்பார்கள்.

பின்னர் அந்த இரத்தத்தின் மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்று அதில் எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எச்.பி.வி. ஆகிய 5 நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா? என்பது பகுப்பாய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு மருத்துவரின் ஒப்புதல் பெறவேண்டும். அதன் பிறகு தான் அந்த இரத்தபை இரத்த வங்கியில் சேமிப்பு செய்யப்படும். இப்படித்தான் ஒவ்வொரு பை இரத்தமும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ஸ்டோரேஜ் செய்ய வேண்டும்.



இந்த பரிசோதனையின் போது ஏதாவது இரத்தத்தில் எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது தெரிய வந்தால் உடனே அந்த இரத்தம் அழிக்கப்படும். அதோடு அந்த இரத்தத்தை கொடுத்தவர் பற்றிய விபரம் நம்பிக்கை மையத்துக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த நபரை உடனே அணுக வேண்டும். அவரை வரவழைத்து நம்பிக்கை மையத்தினர் அவரிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்கள். அது மிகவும் துல்லியமான பரிசோதனை. அந்த பரிசோதனையில் தான் எச்.ஐ.வி. இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங், விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதோடு அவர் நம்பிக்கை மையத்தின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கை மையத்தின் பரிசோதனையில் எச்.ஐ.வி. இல்லை என்றும் வருவதுண்டு. பொதுவாக சேமிக்கப்படும் இரத்தத்தை விட அழிக்கப்படும் இரத்தம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

100 பேரிடம் இரத்தம் எடுத்தால் குறைந்தது 10 பேருக்காவது எச்.ஐ.வி. இருப்பதற்கான அறிகுறி தென்படுவதுண்டு. ஆனால் நம்பிக்கை மையத்தின் துல்லிய ஆய்வில் அதில் பலருக்கு இல்லாமல் கூட இருக்கும் என்கிறார்கள். இரத்தம் 36 நாட்கள் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். அதற்குள் வரிசைப்படி இரத்தத்தை பயன்படுத்துவார்கள்.

இரத்த வங்கியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்காக இரத்தம் தேவைப்படுவோருக்கு உடனே செலுத்திவிட முடியாது. இரத்தம் தேவைப்படுபவரின் இரத்தமும் செலுத்த வேண்டிய இரத்தமும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இரு இரத்தமும் ஒரே பிரிவு இரத்தம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரத்த சோதனை மற்றும் இரத்த வங்கிகள் கண்காணிப்புக்காக நோடல் அதிகாரியாக ஒரு மருத்துவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவும் இருந்தும் தான் இப்படி....! எப்படி இருக்கு?

அடையாளம் காணவேண்டும்

ஒருவருக்கு இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நம்பிக்கை மையத்தினர் தொடர்பு கொண்டு அழைக்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை பெறாமல் எங்காவது சென்று விடுவதுண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பதும், அவர்களால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும் வழியில்லை என்பது பலரது கருத்து.

இதை தடுக்க குருதி கொடையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள். இந்த முறையை அமல்படுத்தினால் அவர்கள் இரத்ததானம் செய்வதையாவது தடுக்கலாம் என்கிறார்கள்.