பிரசன்ன ஜோதிடம் - துல்லியமாக பலன் சொல்லும்
Prasanna - Jothidam
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.
பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.
பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புகளில் குழப்பம் உள்ளவர்களுக்கும், பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சினைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியில் இந்த பிரசன்ன முறை மூலமாக மிக எளிதாக தீர்வு காண முடியும்.
ஏன் சில நேரங்களில் ஜாதகம் உள்ளவர்களுக்கும் கூட இந்த பிரசன்ன முறை என்பது இன்றியமையாததாக ஆகின்றது.
அது எப்படி என்று பார்ப்போம்.. உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் ஜோதிடரிடம் சென்று, தான் இருக்கும் வேலையை விட்டு சொந்த தொழிலில் இறங்கலாமா? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம்.
ஜோதிடத்தில் 6-ம் பாவம் என்பது உத்தியோகத்தையும், 7-ம் பாவம் என்பது சொந்தத் தொழிலையும் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எது 2, 4, 6, 10 போன்ற புறம் சார்ந்த பாவங்களை அல்லது புறத்தை கெடுக்காத பாவங்களை தொடர்பு கொண்டு வலுவான அமைப்பில் இருக்கின்றதோ அது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதே சிறந்ததாகும்.
ஒரு வேளை விதியின் படி இவ்விரு பாவங்களும் சம வலுவுடன் இருந்து, மதி என்கிற நடப்பு தசாநாதன் இவ்விரு பாவங்களில் ஏதாவது ஒன்றை பார்க்கவில்லை எனில், இவ்விரண்டில் எதை செய்தாலும் பெரிய வித்தியாசம் வராது என்பதே இங்கு அர்த்தமாகும். ஆனால் ஜோதிடர் இதை ஆதாரமாகக் கொண்டு உத்தியோகம் அல்லது சொந்தத் தொழில் இவற்றில் எதை செய்தாலும் உனக்கு நன்மையே என்று கூறும் பொழுது, ஜாதகர் மேலும் குழப்பமடையக்கூடும். ஆதலால் இவ்விரண்டில் எதை செய்யலாம் என்று உறுதியாக கூறினால் தான் ஜாதகரின் சந்தேகம் தீரும்படியாக இருக்கும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரசன்னம் மூலமாக, மேற்கூறிய இரண்டில் எதை செய்தால் அதீத நன்மை என்பதை, உறுதியாக கூறிவிடலாம். ஆக ஜாதகம் உள்ளவர்களுக்கும் இது போன்ற சமயங்களில் பிரசன்னம் அவசியமாகின்றது.
மிக மிக குறுகிய கால இடைவெளியில் அரங்கேறும் சம்பவங்களையும், ஒரே நாளில் அரங்கேறும் சம்பவங் களையும் ஜனன ஜாதகத்தில் உள்ள விதி மற்றும் மதியை கொண்டு நிர்ணயம் செய்வது என்பது சற்று கடினமான காரியம் ஆகும்.
ஆனால் பிரசன்ன ஜோதிடத்தில் இது எளிது. குறிப்பாக... ‘இன்று நடைபெற இருக்கும் மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் நான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்குமா?’, ‘வங்கியில் விண்ணப்பித்த கடன் எப்போது ஒப்புதல் ஆகும்?’, ‘இன்று பள்ளியில் நடக்க இருக்கும் பேச்சு போட்டியில் நான் வெற்றி பெறுவேனா?’, ‘வெளியூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த ரெயில் டிக்கெட் காத்திருப்பு வரிசையில் இருந்து உறுதி செய்யப்படுமா?’, ‘இன்று எனது நண்பர் எத்தனை மணிக்கு என் வீட்டிற்கு வருவார்?’, ‘திருடு போன அல்லது காணாமல் போன பணம், பொருள் திரும்ப கிடைக்குமா?’ என்பது போன்ற ஜாதகரின் யதார்த்தமான கேள்விகள், இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகளுக்கு பிரசன்னம் மூலமாக மிக எளிதாகவும், துல்லியமாகவும் தீர்வு காண முடியும்.
ஒரு சில விநாடி இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை கூட, உப நட்சத்திர கோட்பாட்டின் மூலம் மிக அழகாக வேறுபடுத்தி, பின் அதற்கான பலனை தனித்தன்மையுடன் கூறுவதே உயர் கணித சார ஜோதிடத்தின் சிறப்பம்சமாகும். இதே உப நட்சத்திர கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் பிரசன்ன ஜாதகமும் கணிக்கப் படுகிறது.
கிரக நிலைகளையும், பன்னிரு பாவ நிலை களையும் பற்றி தெரிவிப்பது ஜாதகம். ஜோதிடரிடம், பிரசன்னம் பார்ப்பதற்காக வருபவரின் மனதில் இருந்து கேள்வி எப்போது உதயமாகின்றதோ; அந்த குறிப்பிட்ட நேரத்தின் போது வான்மாண்டலத்தில் உள்ள கிரக நிலைகளே பிரசன்ன ஜாதகத்தில் இடம்பெறும். ஆனால் லக்னப் புள்ளியை பொறுத்து வேறுபடும் பாவ நிலைகள் என்பது, கேள்வி உதயமான நேரத்தை கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர் குறிப்பிடும் எண்ணை (1 - 249) பொருத்து கணக்கிடப்படுகின்றது.
வான்மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும், மொத்தம் 249 உபபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆக 360 பாகையைக் கொண்ட வான்மண்டலம் என்பது 249 உபநட்சத்திரங்களை கொண்டது ஆகும். இந்த 249 உபநட்சத்திர பிரிவுகளையும், 1 முதல் 249 வரை உள்ள வரிசை எண்களில் தொகுக்கப்பட்டுள்ளது.
பிரசன்ன ஜோதிடர், வாடிக்கையாளரிடம் 1 முதல் 249 உள்ள எண்களில் ஏதாவது ஒரு எண்ணை குறிப்பிடுமாறு கூறுவார். வாடிக்கையாளர் எந்த எண்ணை குறிப்பிடுகின்றாரோ அந்த எண்ணிற்குரிய உபநட்சத்திரமே லக்ன பாவ உபநட்சத்திரமாக அமையும். அதாவது அந்த எண்ணின் வரிசைக்குரிய உபநட்சத்திரத்தின் பாகையே, லக்ன ஆரம்ப முனையின் பாகையாக நிர்ணயம் செய்யப்படும். பின்னர் அந்த லக்ன புள்ளியை மையமாகக் கொண்டு, மற்ற பதினொரு பாவங்களின் ஆரம்ப முனைகள் கணக்கிடப்பட்டு பிரசன்ன ஜாதகம் கணிதம் செய்யப்படுகிறது.
இவ்வாறு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு எண்ணை பெற்று, பிரசன்ன ஜாதகத்தின் லக்னத்தை தீர்மானிப்பதில் ஒரு சூட்சுமம் உள்ளது. பொதுவாக ஜோதிடத்தில் லக்ன பாவம் என்பது ஜாதகர் ஒரு செயலில் ஈடுபடும் தன்மையையும், ஜாதகரின் எண்ண ஓட்டங்களையும் (சிந்தனை) குறிக்கும். ஆக பிரசன்ன ஜோதிடத்தில் ஜாதகர் தெரிவிக்கும் எண்ணானது, அவர் நினைத்த அந்த செயலைக் குறிக்கும். மேலும் அந்த செயல் நிறைவேறுமா.. நிறைவேறாதா? அப்படி நிறைவேறும் எனில் எப்போது நிறைவேறும்? என்று தெரிவிப்பது, ஜோதிடரிடம் வாடிக்கையாளர் கேட்ட கேள்வி நேரத்தின் போது உள்ள கிரக நிலைகளே ஆகும்.
வரைமுறைகள்
பிரசன்ன ஜோதிடத்திற்கு என்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.
* பிரசன்னத்தின் மூலமாக நாம் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை காண முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகள் இருந்தால் அத்தனை முறை பிரசன்னம் பார்க்கப்பட வேண்டும்.
* பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விகள் யாவும் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?, வீராட் கோலி சதமடிப்பாரா? போன்ற பொதுவான கேள்விகளுக்கு பிரசன்னத்தின் மூலமாக தீர்வு காண முடியாது.
* பிரசன்னத்தில் ஜாதகர் நேரிடையாக தமக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவோ, நெருங்கிய நண்பர்களின் சார்பாகவோ கேள்விகளை முன் வைக்கலாம். அப்போது தான் பிரசன்னம் பலிதம் ஆகும்.
Prasanna - Jothidam
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555