குழந்தைகளை தாக்கும் நிமோனியா - அறிகுறியும் - தடுக்கும் முறையும்

குழந்தைகளை தாக்கும் நிமோனியா - அறிகுறியும் - தடுக்கும் முறையும்
pneumonia-in-children.

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. நிமோனியா காய்ச்சலின் அறிகுறியையும், தடுக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது நிமோனியா காய்ச்சல்தான்.

அறிகுறிகள்

* காய்ச்சல்
* இருமல்
* அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிக்கை)
* மூச்சுவிட கஷ்டமாக இருத்தல்.

காரணங்கள்

* குறைந்த எடை
* ஊட்டச்சத்துக் குறைபாடு
* வைட்டமின் - ஏ குறைபாடு
* தாய்ப்பால் இல்லாமை
* சிகரெட் புகை

போன்றவை மிக முக்கியக் காரணங்கள். இவை தவிர, அதிகம் பேர் உள்ள குடும்பம், வீட்டில் இருப்பவர்களுக்கு நுரையீரல் நோய் இருத்தல், அதிக மக்கள் வசிக்கும் இடத்தில் வசிப்பது, மாசுபாடான காற்றை வீட்டிலும், வெளியிலும் சுவாசித்தல் போன்றவையும் நிமோனியா நோய் வரக் காரணங்களாக இருக்கின்றன.
பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதமே ஆன குழந்தைகளுக்கு நிமோனியா வருவதற்கு, குரூப் - பி ஸ்ரெப்டோ காக்கை, ஈகோலி, கிளப்ஸியெல்லா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை முக்கியக் காரணம்.

3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையுள்ள குழந்தைகளுக்கு, நீமோகாக்கை, ஹெச்&இன்ஃபுளூயன்சா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை நிமோனியா காய்ச்சலை ஏற்டுத்துகின்றன.

ரெஸ்பரேட்டரி சின்சைட்டியல் வைரஸ், இன்ஃபுளூயன்சா வைரஸ், பாரா இன்ஃபுளூயன்சா வைரஸ், அடீனோ வைரஸ் போன்றவையும் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிக் காரணமாக இருக்கின்றன.

ஐந்த வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகள்தான் அதிக அளவில் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.

வைரஸ்களால் ஏற்படும் அறிகுறிகள் :

* மூக்கில் நீர் வடிதல்
* இருமல்
* காய்ச்சல்
* அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிகை)
* மூச்சு விடுவதற்குக் கஷ்டம்
* உடல் நீல நிறமாக மாறுதல்
* மூச்சுவிட முடியாமல் சோர்வு

பாக்டீரியக்களால் ஏற்படும் அறிகுறிகள் :

* நடுக்கத்துடன் குளிர்
* அதிகமான காய்ச்சல்
* இருமல்
* நெஞ்சு வலி
* அதிகமாக மூச்சு வாங்கதல் (மூச்சு விடும் எண்ணிகை)
* கவலை - சோர்வு
* நினைவிழப்பு

மேற்கண்ட அறிகுறிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால், நெஞ்சில் சீழ் பிடிக்கும்.

தடுக்கும் முறைகள் :

* குழந்தைத் தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளையும் கொடுக்க வேண்டும்.

* புட்டிப்பால், டின் பவுடர் பால் கொடுக்கக்கூடாது.

* குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது.

* சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.

* குழந்தை பிறந்தவுடன் தக்க தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும்.

* அவ்வப்போது குழந்தை வயதுக்கேற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து சரிவிகித உணவு கொடுக்க வேண்டும்.

* சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரிடம் காட்டி, நோய் தீவிரமாகாமல் தடுக்க வேண்டும்.