நாராயனேஸ்வரர் கோவில் - தஞ்சை

நாராயனேஸ்வரர் கோவில் - தஞ்சை
Amman-temple.
அபயம் தரும் நாராயனேஸ்வரர் கோவில் - தஞ்சை


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கூத்தூர் என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது நாராயனேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘நாராயனேஸ்வரர்’. இங்குள்ள இறைவியின் பெயர் தான் அதலாம்பிகை.

தாள இயலாத குடும்ப பிரச்சினைகள், தவிர்க்க முடியாத இடர்பாடுகள். இல்லத்தில் நிம்மதி இல்லை. என்ன செய்வது?. இப்படி பல பிரச்சினைகளால் கலங்கி நிற்கும் பெண்கள் அன்னை அதலாம்பிகையிடம் ஓடி வருகின்றனர்.

அன்னையின் சன்னிதியில் முன் நின்று கண்கள் கலங்க மனம் உருகி பிரார்த்தனை செய்கின்றனர். குடும்ப பாரத்தை அன்னையின் காலடியில் அர்ப்பணித்து இல்லம் செல்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் பிரார்த்தனைகளின் பலன் தெரியத் தொடங்குகிறது.


ஆம்... பிரார்த்தனை செய்த பெண்களின் துன்பங்களும், இடர்பாடுகளும் மெல்ல மெல்ல விலகுகின்றன. அவர்கள் வாழ்க்கையின் துயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது. அவர்கள் மனதில் நிம்மதி பெருகிறது.

மனம் மகிழும் அவர்கள் அன்னையை நோக்கி வருகின்றனர். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துக்கின்றனர். பின் நிம்மதியை மனம் நிறைய சுமந்து இல்லம் திரும்புகின்றனர்.

இந்த அன்னை அதலாம்பிகை எங்கே இருக்கிறாள்?

கூத்தூர்.. இந்த சின்னஞ் சிறிய கிராமத்தில் உள்ளது நாராயனேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘நாராயனேஸ்வரர்’. இங்குள்ள இறைவியின் பெயர் தான் அதலாம்பிகை. அந்த அன்னையே இவ்வளவு பெருமைக்கும் உரியவள்.

ஆலய அமைப்பு

இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றி உயர்ந்த திருமதில் சுவர்கள். ஆலயத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் என இரண்டு நுழைவு வாசல்கள். உள்ளே நுழைந்ததும் சிறப்பு மண்டபமும் நந்தி பகவானின் மண்டபமும் உள்ளன. அடுத்து உள்ள நுழைவு வாசலின் வலதுபுறம் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.

மகா மண்டபத்தில் வலதுபுறம் அன்னை அதலாம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரையையும், மேல் இடது கரத்தில் சங்கையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை வீற்றிருக்கிறாள். அன்னையின் முகத்தில் தவழும் புன்னகையைக் காணும் போது, ‘உன்னுடைய துயரங்கள் யாவும் துச்சம். அதை நான் விலக்குகிறேன்’ என்று சொல்வது போல, நம் மனதில் நம்பிக்கை ஏற்படுவது இயல்பான ஒன்று.

அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் நாராயனேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தினசரி ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் இந்த ஆலயத்தில் உற்சவர்கள் இல்லை. எனவே இறைவன்- இறைவி வீதியுலா நடைபெறுவது கிடையாது.

இந்த ஆலயத்தில் பொங்கல், தீபாவளி, மார்கழி 30 நாட்களும் அன்னைக்கும் ஈசனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிரதோஷமும் இங்கு பக்தர்கள் நிறைய பேர் சூழ சிறப்பாக நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இங்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கூத்தூர் என்ற இந்த தலம்.