எலுமிச்சை - சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது?

எலுமிச்சை - சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது?
lemon-face-pack-for-skin-care.


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

எலுமிச்சை பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும், அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

இளமையுடன் இருக்க… உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும்.

சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.


எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க…

எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய…

எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும்.

மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம்.

அக்குள்களைப் பராமரிக்க…

நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.