பிரார்த்தனைகளும் பலன்களும்

பிரார்த்தனைகளும் பலன்களும்
worship-benefits.

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலுக்குள் சிவகங்கை தீர்த்தத்தில் புற அழுக்குப்போக புனித நீராடி பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அசுத்தம் அகற்றினால் பிரமஞானம் பெறலாம்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலுக்குள் சிவகங்கை தீர்த்தத்தில் புற அழுக்குப்போக புனித நீராடி பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அசுத்தம் அகற்றினால் பிரமஞானம் பெறலாம்.

பக்தர்களின் உச்சகட்டமாக அமைவது கார்த்திகை தீபத்திற்கு நெய்குடம் கட்டுதலாகும். கார்த்திகை தீபத்திற்கு பிறகும் மலைமேல் உள்ள தீபமானது 10 நாட்களுக்கு குறையாமல் ஏற்றி வைக்கப்படும். அதற்கு பின் தீபம் ஏற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரம் திருக்கோவிலுக்கு எடுத்து வரப்படும். அந்த பாத்திரத்தில் எஞ்சி உள்ள கருமை நிறமுள்ள சாம்பல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த மை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


திருக்கோவிலில் கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து இறந்தவர்கள் பெயரில் உடல் அடக்கம் செய்யப்படும் நாள் அல்லது திதி அன்று அவரவர்களின் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணை (அல்லது) இலுப்பை எண்ணையில் மோட்சதீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.

குழந்தை பேறில்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும் திருக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து புடவையினால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவது எந்த திருக்கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. குழந்தை பாக்கியமற்ற பக்தர்கள் இறைவனை வேண்டிக் கொண்டு துணியால் செய்யப்பட்ட சிறிய தொட்டில்களை இந்த மரத்தின் கிளைகளில் கட்டுவார்கள். அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியவுடன் தங்கள் குழந்தைகளுடன் இத்திருக்கோவிலுக்கு வந்து தாங்கள் கட்டியிருந்த துணித் தொட்டில்களை நீக்கிவிட்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது.