வான்கோழி வறுவல் செய்வது எப்படி?

வான்கோழி வறுவல் செய்வது எப்படி?
vaan-kozhi-varuval.

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வான்கோழி பிரியாணி எப்படி சுவையாக இருக்குமோ, அதேப்போல் வான்கோழி வறுவலும் ருசியாக இருக்கும். வான்கோழி வறுவல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வான்கோழி - 1/2 கிலோ

 உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

அரைப்பதற்கு...

தேங்காய் - 1 கப் (துருவியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 5

மசாலாவிற்கு...

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்த வான்கோழியை போட்டு அதனுடன், உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும்.

விசில் போனவுடன் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவையான வான்கோழி வறுவல் ரெடி!!!