பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனை

பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனை
brahma-muhurtham-prarthanai.


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அப்பொழுது விழித்திருந்து தேவர்கள், முன்னோர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.

ஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பர். ஒருசிலர் அசதியாக இருக்கின்றது என்று சொல்லி 8 மணிக்கு எழுந்திருப்பர். ஒரு சிலர் இன்று விடுமுறை தானே என்று 10 மணிக்கு எழுந்திருப்பர். இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.

ஆனால் சராசரி மனிதர்கள் காலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ ஆகும். அந்த நேரத்தில் தானே தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.