வீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்

வீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்
Insurance-for-home-loans

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வீட்டு கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் (அ)இறப்பு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.

வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனை மாத தவணைகளாக திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 10 முதல் 25 வருடங்களாக இருக்கும் நிலையில் அந்த நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கடனை திருப்பி செலுத்துவது தடைபடலாம். அதன் காரணமாக அவர் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உதவும் காப்பீட்டு திட்டங்கள்


அவர்களது கருத்துப்படி, கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் அல்லது இறப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடன் மறு சீரமைப்பு

வீட்டு கடனை முற்றிலும் செலுத்தாத நிலையில் கடன்தாரருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் கடனுக்கான இணை விண்ணப்பதாரர் அல்லது அவரது சட்ட ரீதியான வாரிசு ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதுபோன்ற தருணங்களில் கடன் அளித்த நிதி நிறுவனம் அல்லது வங்கி ஆகியவற்றை அவர்கள் அணுகினால் விதிமுறைகளின்படி கடனை மறுகட்டமைப்பு செய்தோ அல்லது இ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பு அளித்தோ உதவிகள் செய்ய வாய்ப்புகள் உண்டு.

கூடுதல் தொகை காப்பீடு

பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்குவதற்கு முன்னர் போதுமான தொகைக்கு காப்பீடு செய்யும்படி வலியுறுத்துகின்றன. அத்தகைய நிலையில் வீட்டு கடனுக்கு ‘டெர்ம் காப்பீடு’ செய்யும் முன்னர் காப்பீட்டு தொகை, பெறப்பட்ட கடன் தொகையை விட அதிகமாக இருந்தால்தான் கடன் பெற்றவரது வாரிசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

வங்கிகள் அளிக்கும் சலுகைகள்

காப்பீடு மூலம் கிடைத்த தொகை போதுமானதாக இல்லை என்ற நிலையில் கடனுக்கான சொத்தை விற்பதன் மூலம் நிலுவை தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் திரும்ப பெறும் சூழல் ஏற்படலாம். ஆனால், வீட்டு கடனை பொறுத்தவரை வங்கிகள் உடனடியாக சொத்துக்களை விற்பனை செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வதில்லை.

கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறு சீரமைப்பு அல்லது இ.எம்.ஐ செலுத்த கூடுதல் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க முன் வருகின்றன.

கடனோடு இணைந்த காப்பீடு

வீட்டு கடன் தணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.