ஹேர் டை - கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஹேர் டை - கவனத்தில் கொள்ள வேண்டியவை
Hair-Dye-Please-Note.

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்…

சிகிச்சையினால் குணப்படுத்த முடியாத இளநரைக்கும் மற்றும் வயதானால் இயற்கையாக ஏற்படும் நரைத்த முடிக்கும் ஹேர் டை உபயோகத்தை தவிர்க்க முடியாத கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிக இளம் வயதிலேயே ஸ்டைலுக்காக கலர் கலராக ‘டை’ அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சரிதானா? இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்…

ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் முன் அவற்றை வகைப்படுத்தி இனம் கண்டுகொள்வது அவசியம். Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD. டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே.


2002ல் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் 1-64% சதவீதம் வரை ஹேர் டைகளில் PPD இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் விலை மலிவான, தரமில்லாத டையை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

காதுக்கு பின்பு அல்லது முன்னங்கையில் இந்த ‘டை’ கலவையை பஞ்சினால் கொஞ்சமாக தடவி விட்டு காய விட வேண்டும். 2-3 நாட்கள் வரை எந்தவித பக்கவிளைவும் ஏற்படாவிட்டால் பின்பு அந்த ‘டையை’ தலையில் தைரியமாக உபயோகப்படுத்தலாம்.

இந்தியா முழுவதும் பல்வேறு ஹெர்பல் மற்றும் ஆயுர்வேதிக் டைகள் விற்கப்படுகின்றன. Para dyes அலர்ஜி உள்ளவர்களுக்கு இது உதவும். இவை மருதாணி இலையை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. 2- Hydroxy 4-Napthaquinone என்னும் வேதிப்பொருட்கள் மருதாணியில் உள்ளது. அதுதான் நமக்கு நிறத்தை கொடுக்கிறது.

இவ்வகை பவுடர்களோடு டீ டிகாஷன் அல்லது காபி டிகாஷன் கலந்து 2-3 மணி நேரம் ஊற வைக்கும்போது ஒரு கருஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது. அதனை தலையில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். இது செய்வது கொஞ்சம் சிரமம். மற்றும் ஸ்ட்ராங்கான வாசனை சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. டை-அலர்ஜி இருப்பவர்கள், அதை தவிர்த்துவிட்டு இந்த மருதாணி இலை துகள்களை (ஹென்னா) பயன்படுத்திக் கொள்ளலாம்.