ஏழரைச்சனி - அஷ்டமச்சனி உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சனிதிசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் திருநறையூர் நாச்சியார் கோவிலில் எட்டு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் அடைவது நிதர்சனமான உண்மை.
ஆயுட் காரகன் என்று சொல்லப்படும், சனீஸ்வரபகவான் தனது இரண்டு மனைவிகளான மந்தா தேவி, ஜேஸ்டா தேவி இருவரோடும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கும் ஒரே இடம் திருநறையூர். இந்தியா முழுவதுமுள்ள கோயில்களில் இல்லாத சிறப்பாக தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள திருநறையூர் நாச்சியார் கோயிலில் மங்களச் சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ ராமபிரானின் பிதாவாகிய தசரத சக்ரவர்த்திக்கும் சனீஸ்வர பகவானுக்கு நடந்த நிகழ்வைப் பார்ப்போம்.
சனி ரோஹினி நட்சத்திரத்தில் 12 வருட காலங்கள் வாசம் செய்து வெளியேறினால் ரோஷிணி சங்கடபேதம் என்னும் கடும் பஞ்சம் ஏற்படும். இதை எவராலும் தடுக்க முடியாது என்று சிவன் நாரதரிடம் தெரிவிக்க.. நாரதர் வசிஷ்ட்ட மகரிஷியிடம் கூறுகிறார். வசிஷ்ட மகரிஷி தசரதனிடம் தெரிவிக்கிறார்.
இதைக் கேட்ட தசரதன் சனி ரோஷிணியை விட்டு கடக்கும் முன் தடுத்து நிறுத்தி போரிட தயாரானார். இந்நிலைக் கண்ட சனீஸ்வர பகவான் தசரதரை நோக்கி ‘மானிட அரசே! உன் வீர பராக்கிரமத்தை புகழ்கிறேன். அதே நேரத்தில் பூவுலகில் மக்கள் மீது நீ கொண்ட நலனை நினைத்தும் மகிழ்கிறேன். ஆனாலும் என்னால் உங்களுக்கு உதவ இயலாது. எனக்கு வழி விடுங்கள் என்று கூறுகிறார். அப்படியும் விலகாத தசரத சக்ரவர்த்தி, சனீஸ்வர பகவானிடம் உள்ளம் உருக ஸ்லோகத்தை சொல்கிறார்.
இதைக் கேண்டு மனமிறங்கிய சனிபகவான் சரி.. உங்கள் விருப்பப்படி செய்கிறேன். என்னை திருநறையூரில் வந்து வழிபடுங்கள். நான் உங்களுக்கு மங்கள சனியாக தரிசனம் தந்து யாரும் தர இயலாத இரண்டு வரங்களைத் தருகிறேன் என்றார். தசரதரும் மகிழ்ந்து திருநறையூர் வந்து அங்குள்ள பெரிய குளத்தில் நீராடி சனிபகவானை நினைத்து வணங்கினார்.
சனிபகவான் குடும்ப சமேதராய் காட்சி தந்து அவர் கூறியபடி இரண்டு வரங்களைத்தருகிறார். முதலாவது வரம் ரோஹிணி சகட பேத காலத்தில் தாம் யாருக்கும் எந்த கஷ்டத்தையும் கொடுப்பதில்லை எனவும், இரண்டாவதாக குடும்ப சமேதராய் உள்ள இவ்வாலயத்திற்கு வந்து என்னை தரிசித்து வழிபடுவோருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களை நீக்குவேன் என்றும் வரம் அருளுகிறார்.
இத்திருக்கோயிலில் குடும்ப சமேதராய் எங்கும் காணமுடியாத வகையில் தசர சக்ரவர்த்தி கைதொழ சாந்த சொரூபமாய் காட்சியளிக்கிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகாவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறி சனிபகவானின் உண்மையான நிறமான நீலவண்ணத்தைக் காட்டுவது மகா சிறப்பு.
அதோடு வேறெங்கும் காண முடியாத உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாணம், சனிப்பெயர்ச்சிக்கு நடைபெற்று திருவீதி உலா வருவது தனிசிறப்பு. சனிதிசையில் உள்ளவர்களும், கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலங்களில் உள்ளவர்கள் எட்டு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் அடைவது நிதர்சனமான உண்மை.
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555